பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடும்பை

149

கொதி



கொடும்பை = குளம், நீர் அருவி, தாம்பு, குன்றம்
கொடுவரி = புலி
கொடுவாய் = பழிச்சொல், வளைந்தவாய்
கொடுவாள் = மழு, அரிவாள்
கொடை = ஈகை
கோடைமடம் = இன்னதுதான் கொடுத்தல் இன்னதுதான் கொடுத்தல் கூடாது என வரையாது கொடுத்துவிடல்
கொட்குதல் = சுழலல், வளைதல்
கொட்டகாரம் = பண்ட அறை
கொட்டடி = சாமான் அறை
கொட்டம் = தொழுவம், இறுமாப்பு, சேட்டை, பொல்லாங்கு, முழக்கம், நீரொழுக்கு, வாசனைப் பண்டம், ஒலைப்பெட்டி
கொட்டாரம் = முதல் வாசல், யானை வரிசை, நெல்சேர்க்கும் இடம் கொட்டி = தாளம், கோபுரவாயில், கூட்டம்
கொட்டியம் = எருது
கொட்டில் = கொட்டகை, சிறு குடில், வில்வித்தை பயில் இடம்
கொட்டு = அடி, தாளம், மண்வெட்டி, பறை ஒலி, வாத்தியம், நெற்கூடு
கொட்டு முழக்கம் = மேளதாளங்கள்
கொட்டை = தலையணை, இடுப்புச் சதங்கை, விதை
கொட்டை நூற்றல் = நூல் நூற்றல்
கொட்பு = சுழற்சி, திரிதல், வளைவு, கொள்கை, குதிரைக்கதி, கருத்து, நிலையின்மை
கொண்கன் = கணவன், நெய்தல் நிலத் தலைவன்
கொண்டல் = கீழ்க்காற்று, மேகம், முன்பனிப் பருவக்காற்று, மேடராசி, மழை
கொண்டல்வண்ணன் = திருமால்
கொண்டி = உணவு, மிகுதி, கொள்ளை, கப்பம், விலைப்பொருள், சிறை, பரத்தை, மன வருத்தம, புறங்கூறல்
கொண்டிமகளிர் = பிடித்து வந்த மகளிர், தாசிகள்
கொண்டியம் = பின்னால் இழிவாகப் பேசல்
கொண்டை = இலந்தை, தலை, கொண்டை
கொண்மூ = ஆகாயம், மேகம்
கொதி = சூடு, கோபம், கொதித்தல்