பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150



கொதுகு = கொசுகு
கொத்தடிமை = பழ அடிமை, குடும்பத்தோடு அடிமை
கொத்தம் = எல்லை
கொத்தவால் = சந்தை விசாரனைக்காரன்
கொத்தளம் = அரண், மதிற் புறம்
கொத்து = உணவு, வர்க்கம், கொத்து, பூங்கொத்து, திரள், குடும்பம் சோறு
கொத்தை= பழுது, அஞ்ஞானம், குருடன்
கொந்தகன் = படைத் தலைவன்
கொந்தல்=தணியாக்கோபம், பெருங்குளிர்
கொந்தளம் = மாதர் தலை மயிர், குழப்பம், கூத்து வகை, காண்டாமிருகம்
கொந்து = கொத்து, கோபம்
கொப்பம்= ஒரூர், யானையைப் பிடிக்க வெட்டப்பட்ட பெருங்குழி
கொப்பு = மயிர் முடி
கொப்புள் = கொப்பூழ், குமிழி, நாபி
கொம்பன் = ஆண்யானை
கொம்மை = இளமை, அழகு திரட்சி, பெருமை, மேடு, வட்டம், மார்பு, முலை, திடர், அடுப்புக்குமிழ்
கொய்யுளை = குதிரை பிடரி மயிர், குதிரை
கொலு= இராச சமூகம், உல்லாசமாக வீற்றிருத்தல்
கொலைஞர்=வேடர், கொலைகாரர்
கொலைமலை = யானை
கொலைவர் = வேடர்
கொல்=வருத்தம், கொலை கொல்லன்
கொல்குறும்பு = பாலை நிலவூர்
கொல்லத்து வேலை = சிற்ப வேலை,கட்டடவேலை
கொல்லர் = அரசர் மாளிகை வாயில் காவலர், கருமார்
கொல்லி = ஒருபண்,ஒரு மலை
கொல்லிப்பாவை= கொல்லி மலையில் சிரித்துச் கொல்லும்தெய்வம்
கொல்லிவெற்பன் = சேரன்
கொல்லுலை= கருமான்உலைக்களம்
கொல்லை = தோட்டம், புறக் டை, புன்செய், தினைப்புனம்
கொழிஞ்சி = பூவாது காய்க்கும் மரம், நாரத்தை
கொழிப்பு = குற்றம்
கொழு= மழு, கலப்பை இரும்பு, கொழுப்பு
கொழுகொம்பு = அடைக்கலம், கொடியேறுகொம்பு