பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமர்தல்

13

அம்பர்


அமர்தல் = மாறுபடுதல், அடங்குதல், அமைதல், இருத்தல், பொருந்துதல், ஒத்தல், மகிழ்தல், விரும்புதல்
அமர்வு = சேர்க்கை, இருப்பிடம், விருப்பம்
அமலம் = அழகு, அழுக்கு இன்மை
அமலகம் = நெல்லிக் காய்
அமலல் = நெருங்கல்
அமலன் = கடவுள், குற்றமற்றவன்
அமலுதல் = நெருங்குதல், நிறைதல், பெருகுதல்
அமலை = பார்வதி, காளி, திரட்சி, கூத்து, சோற்றுத் திரளை, ஆரவாரம், மிகுதி
அமளி = ஆரவாரம், மிகுதி, படுக்கை, அணை
அமறல் = மிகுதி, நெருங்கல், பொலிதல்
அமாத்தியன் = மந்திரி
அமாசி = சூரியனும் சந்திரனும் கூடும் நாள்
அமிசை = அமைப்பு
அமிர்தகலசம் = முலை
அமிர்தகிரணன் = சந்திரன்
அமிர்தம் = இறவாமை, இனிமை, உணவு, சோறு, தேவரூண், பால், நீர், மோட்சம்
அமீர் = முஸ்லிம் பிரபு, தலைவன்
அமீனா = உத்தியோகஸ்தன்
அமுதர் = இடையர், தேவர்
அமுது = சோறு, அமிர்தம்
அமுதுபடி = அரிசி
அமை = அமரவாசி, மூங்கில், அழகு, அமைவு
அமைதி = செய்தி, நிறைவு, சமயம், அடக்கம், மாட்சிமை
அமைத்தல் = அழுத்துதல், அடக்கல், சமைத்தல், நியமித்தல்
அமோகம் = மிகுதி, மோகமின்மை
அம் = அழகு, நீர், மேகம்
அம்சம் = அன்னம், உரிமைப் பங்கு
அம்சுமாலி = சூரியன்
அம்பகம் = கண், எழுச்சி, செம்பு, விடை
அம்பணத்தி = துர்க்கை
அம்பணம் = ஆமை, மரக்கால், வாழை, யாழ்வகை, நீர், துலாக்கோல்
அம்பணவர் = பாணர்
அம்பரம் = ஆகாயம், கடல், சிலை, திசை, தூங்குமிடம்
அம்பர் = அவ்விடம், ஓர் ஊர்