பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அம்பல்

14

அயா


அம்பல் = பழி மொழி, சிலரறிந்து புறங்கூறல்
அம்பா = தாய், பார்வதி, துர்க்கை
அம்பால் = தோட்டம்
அம்பி = ஒடம், தம்பி, இறைக்கும் கூடை, நீர்ப்பொறி, மரக்கலம், கள்
அம்பிகாபதி = சிவன், கம்பன் மகன்
அம்பு = நீர், பாணம், மேகம், தளிர், எலுமிச்சை, மூங்கில், வளையல், உலகம்
அம்புக்குதை = அம்பின் இறகு
அம்புசம் = தாமரை
அம்புசாதம் = தாமரை
அம்புதம் = மேகம், கோரை
அம்புதி = கடல்
அம்புயம் = தாமரை
அம்புயன் = பிரமன்
அம்புயை = இலக்குமி
அம்புராசி = கடல்
அம்புலி = சந்திரன்
அம்புலிமான் = சந்திரன்
அம்போதி = கடல், காற்று
அம்பை = தாய், பார்வதி
அம்போருகம் = தாமரை
அம்போருகை = இலக்குமி
அம்மம் = முலை
அம்மனை = தாய், அம்மனை, ஆட்டம், தீ
அம்மானை = மகளிர் விளயாட்டுக்களில் ஒன்று
அம்மாமி = தாய்மாமன், மனைவி
அம்மை = அழகு, அமைதி, தாய், பார்வதி, முன்பிறப்பு, வருபிறப்பு
அம்மையப்பர் = சிவபெருமான்
அயக்கிரிவன் = விஷ்ணு
அயநம் = வருடப்பாதி, வழி, இடம், சரித்திரம், போதல்
அயம் = ஆடு, குதிரை, நிலம், நீர், இரும்பு, குளம், சேறு, சுனை, பள்ளம், நல்வினை, விழா, ஐயம்
அயர் = வருத்தம்
அயர்ச்சி = மறதி, தளர்ச்சி
அயர்தல் = விரும்புதல், உணர்வழிதல், தவர்தல், செய்தல், சோர்தல், மறத்தல், கொண்டாடுதல்
அயர்த்தல் = மறத்தல்
அயர்வு = மறப்பு, தளர்வு, வருத்தம்
அயவணம் = ஒட்டகம்
அயவாகனன் = அக்கினி
அயன் = சிவன், பிரம்மன்
அயா = வருத்தம், தளர்ச்சி