பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயாவுயிர்த்தல்

15

அரமியம்




அயாவுயிர்த்தல் = வருத்தம் நீங்கல், நெட்டுயிர்ப்புக் கொள்ளுதல்
அயிராணி = இந்திராணி
அயிராவணம் = சிவன் யானை
அயிராவதம் = இந்திரன் யானை
அயிரை = நுண்மணல், சிறு மீன்
அயிர் = சருக்கரை, நுண்மணல், சந்தேகம், ஐயம், நுண்மை
அயிர்த்தல் = சந்தேகித்தல்
அயில் = கூர்மை, வேல், அழகு, இரும்பு, கலப்பை, கோரை
அயில்தல் = உண்ணுதல்
அயினி = சோறு, நீராகாரம், ஆலத்தி
அயுதம் = பதினாயிரம்
அரக்கு = தென், சிவப்பு
அரங்கம் = ஆற்றிடைக்குறை, சபை, ஸ்ரீரங்கம், கல்விச்சாலை, யுத்தகளம், சிலம்பக் கூடம், விழாக்களம், மண்டபம், நாடகசாலை, சுடுகாடு
அரங்கல் = அழிதல், தைத்தல், அழுந்துதல்
அரங்கு = அறை, சபை, சூதாடவகுத்த அறைகள், நாடகசாலை
அாங்கேற்றுதல் = நூலைச் சபையில் பெரியோர்க்குக் காட்டி அவர் சம்மதம் பெறுதல்
அரசிறை = கப்பம், சக்ரவர்த்தி
அரசுகட்டில் = சிம்மாசனம்
அரசுவா = பட்டத்துயானை
அரட்டர் = குறுநில மன்னர், வழிபறி கொள்ளைக்காரர்
அரட்டி = அச்சம்
அரணம் = கவசம், அரண், கோட்டை, மதில், வேலி, நீக்குதல், வேல், கதவு, செருப்பு
அரணி = தீக்கடைக்கோல் காடு, மதில், சூரியன், கவசம்
அரணியம் = காடு
அரண் = காவல், கோட்டை, மதில்
அரதனம் = இரத்தினம்
அரதி = வெறுப்பு
அரத்தகம் = செம்பஞ்சு, பவமும், பொன், கடம்பு, துகில், நீர்
அரத்தம் = சிவப்பு, இரத்தம்
அரந்தை = வருத்தம்
அரமகளிர் = தெய்வப் பெண்
அரமியம் = நிலா முற்றம், மேல் வீடு