பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161


 சட்டன் 161 சதுமுகன்

சட்டன் = மாணாக்கன் சட்டி = அறுபது, ஆறாம் திதி சட்டுவம் = அகப்பை, தோசை திருப்பும் கருவி சட்பதம் = வண்டு, ஆறுகால் சட்பம் = அறுகு, மயிர், இளம்புல் சட்ரசம் = அறுசுவை உண்டி சணகம் = கடலை சண்டப்பிரசண்டம் = மிகுவேகம் சண்டமாருதம் = பெருங்காற்று சண்டம் = கொடுமை, கோபம், வேகம், மிகுவலி சண்டன் = சண்டேசுர நாயனார், சிவன், அலி, இயமன் சண்டி = காளி, பிடிவாதக்காரன் சண்டிகை = காளி, துர்க்கை சண்டு = பதர், பயிரில் விழும் வண்டு சண்ணித்தல் = பூசுதல் சண்பு - கோரை சண்பை= சீர்காழி சதகம் = நூறு செய்யுட்களைக்கொண்ட நூல் சதகோடி = வச்சிராயுதம், நூறு கோடி சதக்கிரது = இந்திரன் சதக்கினி = நூற்றுவரைக் கொல்லும் ஒரு பொறி சதசத்து = ஆத்மா, சத்தும் அசத்தும் ஆனது சதசு = சபை சததளம் = தாமரை சதபத்திரம் = தாமரை, மயில் சதமகன் = தேவேந்திரன் சதம் = இறகு, நித்தியம், நூறு, அறுபட்ட மயிர் சதனம் = இறகு, இலை, வீடு சதா = மரக்கலம், எப்போதும் சதாகதி = காற்று, ஒயாநடை சதாசிவன் = அனுக்கிரக மூர்த்தி சதாபலம் = தென்னை, எலுமிச்சம்பழம் சதி = உரோகிணி, மனைவி, கற்புடையவள், துரோகம், தாள ஒத்து, வஞ்சனை சதித்தல் = அழித்தல் சதிரிசம் = உவமை சதிர் =நாட்டியம், பெருமை, வேறு, நிலைமை சதுக்கம் = நாலு தெரு கூடும் இடம், நான்கு, சதுரம், சந்து சதுக்கல் = வழுக்கல் சதுமுகன் = அருகன், பிரமன்