பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சளகன்

169

சாகியம்


சளகன் 169 சாகியம்


சளகன்= மன நிலையற்றவன் சளம் = துன்பம், வஞ்சனை, மூர்க்கம், நடுக்கம் சற்கன்மம் = நற்காரியம் சற்காரம் = உபசாரம் சற்சங்கம் = நல்லோர் கூட்டம் சற்பத்திரம் = உத்தமன் சற்புத்திரமார்க்கம் = கிரியாமர்க்கம் சனனம் = பிறப்பு சனு = வேண்டியவர் சன்னி = தாய் சனாதன தர்மம் = முற்கால முதலே வந்து கொண்டிருக்கும் தர்ம மார்க்கம் சனாசாரம் = உலக நடை சனார்த்தனன் = விஷ்ணு சன்மசபல்யம் = பிறவிப்பேறு சன்மலி = இலவு சன்மன் = மகன் சன்மார்க்கம் = ஞானமார்க்கம், நன்னெறி சன்னதம் = தெய்வங்கூறல், மிகு கோபம், ஆவேசம் சன்னது = உரிமைச்சாசனம் சன்னத்தம் = ஆயத்தம் சன்னம் = நுண்மை, நுண்ணிய பொடி, மறைபொருள், வெள்ளை, அழகு சன்னவீரம் = வெற்றி மலை சன்னாகம் = போர்க்கவசம், ஆயத்தம் சன்னிதானம் = திருமுன், கடவுள் அவேசித்தல் சன்னித்தல் = பிறத்தல் சன்னிதி = திருமுன், கோவில் சன்னை = குறிப்பு, பரிகாச வார்த்தை

           சா

சா = சாதல், மரணம், பேய் சாகசம் = வீரம், வெள்ளாடு, துணிவு, இலை, தற்கொலை, தேக்கு, யானை, பாசாங்கு, தேனி, வில், பலாத்காரம் சாகதன் = வீரன் சாகம் = ஆடு, தேக்கமரம், இலை, சிறுகீரை சாகரம் = விழிப்பு, கடல், பதினாயிரம் கோடி சாகாடு = வண்டி, சக்கரம், ரோகிணிநாள் சகாமருந்து = தேவமுதம் சகித்யம் = இலக்கியம், கூட்டம், புலமை சாகியம் = கூட்டம்.