பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173



சாரதி 173 சாலோகம்

சாரதி = புலவன், தேர்ப்பாகன்
சாரதை = சரஸ்வதி
சாரமேயன் = நாய்
சாரம் = இனிமை, மருந்து, சத்து, கருத்து, திரவியம், மாவயிரம், பலம், நீர், வெண்ணெய்
சாரர் = ஒற்றர்
சாரல் = மலைப்பக்கம், குளிர்காற்று
சார் = வட்டமாக ஓடுதல், முறை, சூதாடு கருவி, வாகன மீது செல்லல்
சார்கை = மைனாப் பறவை, சுழல் காற்று, வட்டமாய் ஒடல்
சாரியை = குரைதியின் சுற்று வரவு
சாரு = அழகு, கிளி
சாருகன் = கொலைசெய்பவன்
சாரூபம் = கடவுள் உரு பெற்று விளங்கும் பேறு
சார் = அணை, அழகு, கறை, இடம், திண்ணை, பக்கம், கூடுகை, வகை
சார்ங்கம் = விஷ்ணுவின் வில்
சார்த்தூலம் = புலி
சர்ந்தார் = நண்பர், உறவினர்
சார்பு=பற்று, உதவி, இடம்,சேர்பு, ஆதாரம், பிறப்பு, அணைவு, அடைக்கலம்
சார்வபூபன் = சிவன், எவரையும் வணங்காது உலகையாள்பவன்
சார்வபௌமன் = எவரையும் வணங்காது உலகையாள்பவன், சிவன்
சால = மிக
சாலகம் = பூவரும்பு, மதகு, சிலந்திவலை, பறவைக்கூடு, சல தாரை, பலகணி
சாலக்கிராமம் = விஷ்ணுவடிவாகக் கருதப்படும் ஒருகல்
சாலம் = கூட்டம், நடிப்பு, மதில், வலை, அரண், சபை, மாயவித்தை
சாலி = அருந்ததி, நெல், கள், மிக்கோன்
சாலிகர் = நெய்தொழிலாளர்
சாலிகை = கவசம்
சாலினி = அருந்ததி, தேவராட்டி
சாலுதல் = பொருந்துதல், அமைதல், மிகுதல், நிரைதல், ஒவ்வுதல்
சாலேகம் = பலகணி, சாளரம், சந்தனம், பூவரும்பு
சாலேயம் = நெல் விளையும் நிலம்
சாலை = அறை, அறச்சாலை, கூடம், பொது மண்டபம், குதிரைப் பந்தி
சாலோகம் = இறைவன் உலகத்து இருக்கும் பேறு