பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188


சூதானம் 188 சூழ்கோடை

சூதானம் - எச்சரிப்பு, சேமம் சூதிகை = பிள்ளை பெற்ற வீடு சூது = தாமரை, வெற்றி, சூதாட்டு, வஞ்சகம், உபாயம் சூத்திரப்பா = நூற்பா சூத்திரம் = யந்திரம், இரகசியம், உபாயம், நூல், நியாயம், பூணூல், சில எழுத்தால் பல பொருள் விளக்கும் யாப்பு வகையில் ஒன்று சூம்புதல் = வாடிச்சிறுத்தல் சூரணம் = கருணைக்கிழங்கு, பஸ்பம் சூரணிகை = கருத்துரை சூரம் = வீரம், அச்சம், கடலை சூரரமகளிர் = தெய்வப் பெண்கள் சூரல் = பிரம்பு சூரன் = சூரபத்மன், வீரன், நாய், நெருப்பு, சூரியன் சூரி = காளி, புலவன், சூரியன், கத்தி சூரிகலை = வலப்பக்க நாசி வழிவரும் சுவாசம், பிங்கலை சூரியகாந்தம் = சூரியன் ஒளி பட்டதும் நீர்கசியும் கல் சூரியகிரணம் = சூரிய ஒளி சூரியன் = சோழன், சூரியன் சூர் = அச்சம், தெய்வம், சூரன், நோய், கொடுமை, வனதேவதை சூர்ணிகை = கருத்து விளக்கும் தொடர் சூர்த்தல் = அச்சங்கொடுத்தல், சுழலுதல் சூர்ப்பம்= முறம் சூர்ப்பு = பயம், கடகம், வளைவு சூலி = காளி, சிவன்,கர்ப்பிணி சூலினி = பார்வதி சூலுதல் = தோண்டுதல், அறுத்தல் சூல் = முட்டை, கர்ப்பம், சூலம் சூழல் = கூட்டம், சூழ்ச்சி, குறிப்பு, இடம், சுற்றுப்புறம், மணற்குன்று சூழி = உச்சி, யானைமுக படாம், நெற்றி, நீர்நிலை, தலையணி, கடல் சூழிகை = கள் சூழியம் = குழந்தை நகை. சூழுதல் = ஆலோசனை பண்ணல் சூழ் = கடலை, தலைமாலை, ஆலோசனை, சுற்று சூழ்கோடை = சூறாவளி காற்று