பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சே



சே = எருது, சிவப்பு, ஏறு, ஒரு வகை மரம்
சேகண்டி = சேமக்கலம், தெருக்காவல்
சேகரம் = கூட்டம், மாமரம், அழகு, தலை, முடி
சேகிலி = வாழை
சேகில் = சிவந்த எருது
சேகு = தழும்பு, குற்றம், பகை, திடம், சிவப்பு, ஐயம், மரவயிரம்
சேகை = சிவப்பு
சேக்குதல் = சிவத்தல், கிடத்தல்
சேக்கை = படுக்கை, கட்டில், தங்குமிடம், உடல் தழும்பு, கூடு
சேடகம் = கேடகம்
சேடல் = மல்லிகை, பவழக் கால்
சேடன் = பெரியோன், ஆதிசேடன், பாங்கன், நெய்தல் தொழில் செய்பவன், தோழன், இளையோன்
சேடி = வித்தியாதரர் உலகு, இடையர்வீதி, இளையாள், தோழி, வேலை செய்பவள்
சேடு = அழகு, இளமை, திரட்சி, நன்மை, பெருமை
சேட்சி = தூரம்
சேட்டன் = மூத்தவன்
சேட்டம் = பெருமை, தலைமை
சேட்டித்தல் = தொழிற்படுத்துதல்
சேட்டை = அக்காள், மூதேவி, தொழில், பெருவிரல், முறம், விசாகம்
சேட்படல் = தூரப்படுத்தல், எதிர்த்தல், நெடுங்காலமாதல்
சேண = உயர
சேணம் = கலணை, மெத்தை
சேணி = ஏணி, வரிசை செடி
சேணியன் = வித்தியாதரன், இந்திரன், சேணியன்
சேண் = தூரம், ஆகாயம், தேவர் உலகம், அகலம், உயர்வு, நீளம், மலைஉச்சி, நெடுங்காலம்
சேண்டிரவர் = நெய்பவர்
சேதகம் = சிவப்பு, சேறு
சேதனம் = அறிவு, வெட்டுதல், அறிவுடைப்பொருள்
சேதனன் = ஆத்மா, அறிவுடையோன்
சேதா = சிவப்புப்பசு, பசு
சேதாரம் = மாமரம், பொன் உரை
சேதித்தல் = அழித்தல், வெட்டல்