பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேதிமம்

195

சேனை





சேதிமம், சேதியம் = தேவாலயம், பௌத்தப்பள்ளி
சேது = இராமேஸ்வரம், சிவப்பு, செய்கரை
சேத்தல் = சிவத்தல், எய்துதல், துயிலல், கோபித்தல், தங்கல்
சேத்திரம் = உடம்பு, வயல், தலம்
சேத்து = ஒப்பு, சிவப்பு, கருத்து
சேந்தன் = குமரன், முருகன்
சேந்தி = கள்
சேந்து = தீ, சிவப்பு, அசோகு
சேப்புதல் = தங்குதல்
சேமநிதி = புதயல்
சேமம் = இன்பம், நன்மை, அரசனிடம், சிறைச்சாலை, க்ஷேமம், காவல், போற்றி வைத்த பொருள்
சேயவன் = முருகன்
சேயம் = கரை
சேயிழை = பெண், நகை
சேய் = முருகன், சிவப்பு, செம்மை, தலைவன், குழந்தை, இளமை, தூரம், நீளம், மகன், மூங்கில்
சேய்மை = நீளம், தூரம்
சேரலன் = சேர மன்னன், பகைவன்
சேரலி = நெல்
சேரார் = பகைவர்
சேரி = தெருவு, ஊர்
சேர்பு = விடு
சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன், வருணன்
சேர்ப்பு = கலப்பு, கடற்கரை
சேர்வு = வீடு, கூட்டம், திரட்சி, மருத நிலத்து ஊர்
சேர்வை = சேனை, கலப்பு, கட்டு
சேலம் = ஆடை, ஓர் ஊர்
சேலை = அசோகு, ஆடை
சேவகம் = யானை, துயில், இடம், வணக்கம், வீரம், தூக்கம், தொழில்
சேவல் = காவல், ஆண் குதிரை, சேறு
சேவித்தல் = வணங்குதல், வாத்தியம் வாசித்தல்
சேவை = ஊழியம், வணக்கம்
சேறல் = செல்லுதல்
சேறு = இனிமை, தேன், விழா,செறிவு, களி, சாறு, பாகு
சேனம் = பருந்து
சேனாபதி = முருகன்
சேனை = படை, ஆயுதம், கூட்டம், தெருவு