பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஞா



ஞாங்கர் = பக்கம், கரை முன், வேல், மேல் இடம், இனி, அங்கு ஞாஞ்சில் = கலப்பை, மதில் உறுப்பு ஞாட்பு = போர், போர்க்களம், வலி, பாரம், கனம், கட்டடம் ஞாண் = கயிறு, வில், நாண் ஞாதம் = அறிவு, அறியப்பட்டது ஞாதா = அறிகிறவன் ஞாதிகள் = தாயத்தார், பங்காளிகள் ஞாதுரு = அறிகிறவன், அறிவு ஞாத்தல் = கட்டுதல், பொருந்துதல் ஞாபகம் = அறிவு, நினைவு ஞாபதம் = போதித்தல் ஞாயர் = தாய்மார் ஞாயில் = மதில் உறுப்பு, மதில் ஞாயிறு = சூரியன், ஞாயிற்றுக் கிழமை ஞாய் = தாய் ஞாலம் = பூமி, உலகம், வித்தை, உயர்ந்தோர் ஞாலுதல் = சாய்தல், முழங்கல், தொங்குதல் ஞாழல் = குங்குமமரம், வைரம், கோங்கு மரம், புலி நகக் கொன்றை ஞாழ் = யாழ் ஞாளம் = தண்டு ஞாளி = கள், நாய் ஞாளியூர்த்தி = வைரவன் ஞாறுதல் = தோன்றுதல், மணம் வீசுதல் ஞாற்சி = தொங்குதல் ஞானசாதனம் = ஞானப் பயிற்சி ஞானதிட்டி = ஞானக் கண் ஞான நாயகன் = சிவன் ஞான புத்திரன் = சீடன் ஞானம் = அறிவு, தெளிவு ஞான வல்லி = உமை, தத்துவ நூல் ஞானன் = கடவுள், பிரமன் ஞானார்த்தம் = ஞானபரமான பொருள் ஞானி = பிரமன், அருகன், பேரறிஞன் ஞானியண்டம் = கோழி முட்டை ஞானேந்திரியம் = அறிகருவி, மெய், வாய், கண், முக்கு, செவிகள் ஞான்று = காலம், நாள்