பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தகடு = இலை வடிவு, இதழ்,
தகண் = தட்டு, தழும்பு, தடை
தகம் = சூடு
தகரம் = மயிர்ச் சாந்து, ஒரு மரம், இருதயம், ஈயம்
தகர் = மேட்டு நிலம், செம்மறியாடு, பூமி, பொடி
தகர்தல் = உடைதல்,விழுதல்
தகல் = தகுதி, தடை
தகவல் = உதாரணம்
தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு
தகளி = அகல்
தகழி = உண்கலம், அகல்
தகனகிாியை = ஈமச்சடங்கு
தகனன் = அக்னி
தகாமை = ஒவ்வாமை
தகுணிதம் = ஒரு தோற் கருவி
தகுதி = ஒழுக்கம், குணம், உரிமை, நடுவு நிலமை, பொறுமை
தகுவா் = அசுரா்
தகுவியா் = அரக்கமகளிர்
தகை = அழகு, அன்பு, அருள், குணம், தகுதி, தாகம், மேம்பாடு, பெருமை, தடை, கூறுபாடு, மாலை, மிகுதி, உரிமை, பொருத்தம், தன்மை, நன்மை, நிகழ்ச்சி
தகைதல் = தடுத்தல், பிடித்தல், அடக்குதல், ஒத்தல்
தகைத்தல் = சுற்றுதல், தடுத்தல், கட்டுதல், அரிதல், வாட்டுதல், களைத்தல்
தகைத்து = தன்மையுடையது
தகைப்பு = மாளிகை, படைவகுப்பு, மதில் சுற்று
தகைமை = அழகு, குணம், தகுதி, பெருமை,
தக்கரம் = களவு, வஞ்சகம் தக்கன் = கள்வன், சமர்த்தன்
தக்கார் = நடுநிலைமையுடையோர், நிபுணர், தகுதியுடையவா்
தக்கிணம் = தெற்கு, வலப்பக்கம்
தக்கிரம் = மோர்
தக்கை = பம்பை, வாத்தியம், காதிடு தக்கை
தக்கோலம் = வால் மிளகு,தாம்பூலம்,