பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்கலா்

203

_தடிநி




தங்கலர் = பகைவர்
தச்சகம் = பத்து
தசக்கீாிவன் =இராவணன்
தசபலன் = புத்தன்
தசமஸ்கந்தம் = பத்தாவது பாகம்
தசமுகன் = இராவணன்
தசம் = பத்து
தசனம் = கவசம், பல், மலைமுடி
தசாங்கம் = அரசா்க்குரிய அங்கங்கள் பத்து. அவை ஊா், யானை, கொடி, செங்கோல், நாடு, குதிரை, மலை, மாலை, முரசு, ஆறு
தசாவதாரம் = திருமால் எடுத்த பத்து அவதாரங்கள், அவை மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகவதாரம், வாமனுவதாரம், நரசிம்மாவதாரம், பரசுராமாவதாரம், தசரத ராமாவதாரம், பலராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், கற்கி அவதாரம்
தசும்பு = குடம்,பொன், விமானகலசம்
தசை = நிலை, மாமிசம்
தஸ்கரம் = களவு
தஞ்சம்=அடைக்கலம், எளிமை, தாழ்மை,துணை, பற்றுக்கோடு, புகலிடம்
தட= பெருமை
தடக்கை = வளைந்தகை
தடங்கண் = பெரியகண்
தடத்தம் = அருகில் இருப்பது,கரையில் இருப்பது, நடுநிலை, திருத்தியநிலை, பொருட்குளதாம் பொது இயல்பு
தடஸ்தன் = ஞானி, பாரபட்சம் இல்லாதவன்
தடம் = குளம், மலை, வழி, கரை, பெருமை, அகலம், வளைவு, வரம்பு,
மனை வாயில், மூங்கில் தாழ்வாரம்,மணல் குன்று
தடயம்= ஆபரணம்
தடவரல் = தடவுதல்,வளைவு
தடவு = பெருமை, தூபக் கால், வளைவு, ஒமகுண்டம், சுனை, ஒரு மரம்
தடவுதல் = வீணை வாசித்தல், வருடுதல்
தடவுவாய் = மலைச்சுனை
தடறு = ஆயுதஉறை, பறை
தடா = பெருமை, மிடா
தடாம் = வளைவு
தடாரி = உடுக்கை, பம்பை
தடி = சிறுவயல், மாமிசம், தண்டு, பற்றுக் கோடு, வில், உடும்பு, கருவாடு
தடிதல் = குறைத்தல், வெட்டுதல், அழித்தல்
தடித்து = மின்னல்
தடிதி = நதி