பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துறைவன்

225

தூசு


துறைவன் = நெய்தல் நிலத்தலைவன் துற்றுதல் = நெருங்குதல், உண்டல் துற்றி = உண்ணப்படுவது துற்று = உணவு,சோறு துனி = அச்சம், ஊடல், துன்பம், முதிர்வு, கோபம், பிரிவு, வெறுப்பு, வறுமை, நோய் துனித்தல் = வெறுத்தல் துனைவு = விரைவு துன்றுதல் = நெருங்குதல்,பொருந்துதல் துன்னகாரர் = தையல்காரர் துன்னம் = துளைத்தல், தைத்தல், ஊசித்துளை துன்னர் = தையற்காரர்,சக்கிலி

துன்னலர்,
துன்னார்
=பகைவர்

துன்னியார் = அடுத்தோர்,சிநேகிதர் துன்னீதி = அநீதி, துர்நடை துன்னுதல் = நெருங்குதல், தைத்தல், பொருந்துதல், ஆலோசித்தல் துன்னுநர் = அடுத்தோர்,சினேகிதர் துன்னூசி = தையல் ஊசி

தூ

தூ= சுத்தம், தசை, பகை, பற்றுக்கோடு, வெண்மை, வலி, இறகு தூக்கணம் = உறி, தொங்குதல், தூக்கணங் குருவி தூக்கு = ஆராய்வு, உயர்ச்சி, உறி, கூத்து, தூக்கணம், நிறை, பாட்டு, தொங்கும் பொருள், செய்யுள் தூங்கல் = ஆடல், தாழ்தல், யானை, சாதல், உறங்குதல், தொங்குதல், மிகுதல், தங்குதல், அசைதல் தூங்காமை = சோர்வில்லாமை தூங்குதல் = சோம்பியிருத்தல், உறங்குதல், தொங்குதல், அசைதல், வாடுதல் தூசம் = யானை கட்டும் கயறு தூசி = குதினை, முன் சேனை, போர் தூசிப்படை = முன் செல்லும் சேனை தூசு = சிலை, யானை கட்டும் கயிறு, பஞ்சு, முன் அணிச் சேனை