பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெரிசம்

228

தெறுக்கால்




  
தெரிசம் = அமாவாசை
தெரிதரல் = அறிதல்
தெரித்தல் = எழுதல், சொல்லல், விளக்குதல், தெரிவித்தல், பங்கிடுதல்
தெரிப்பு = பிரிப்பு, ஆராய்வு, சொல்லுதல்
தெரியலர் = பகைவர்
தெரியல் = மாலை
தெரியிழை = பெண்
தெரிவை = பெண்
தெருட்சி = அறிவு, தெளிவு
தெருட்டுக்கல்யாணம் = ருது சாந்தி
தெருட்டுதல் = தெளிவித்தல் வற்புறுத்தல், ஊடல் தீர்த்தல்
தெருண்டபெண் = ஆளான பெண்
தெருண்டமேலவர் = அறிவிற் சிறந்தவர்
தெருமரல் = அச்சம், சுழலல், மனக்கவலை
தெருள் = அறிவின் தெளிவு, ஞானம்
தெவிட்டுதல் = உமிழ்தல், திரளுதல், தொனித்தல், ஒலித்தல், நிறைதல், அடைத்தல், மறைத்தல், தங்குதல்
தெவ் = பகை, போர்
தெவ்வுதல் = கவர்தல், நிறைத்தல், கொள்ளுதல்
தெவ்வினை = போர்
தெழித்தல் = கோபித்தல், ஒலித்தல், அதட்டுதல், முழக்குதல், அடக்குதல், வருத்துதல், நீக்குதல், ஆரவாரித்தல்
தெழிப்பு = அதட்டல்
தெளிஞன் = அறிஞன்
தெளித்தல் = விதைத்தல், சபதம் கூறல், தெளிவித்தல்
தெள்விளி = ஓர் இசைப்பாட்டு
தெள்ளிமை = தெளிவு
தெள்ளியர் = அறிவுடையோர்
தெள்ளுதமிழ் = செந்தமிழ்
தெள்ளுதல் = ஆராய்தல், தெளிவாதல்
தெள்ளேணம் = மகளிர் விளையாட்டு, கை கொட்டிப் பாடியாடல்
தெறல் = வெம்மை, கோபித்தல், அழித்தல்
தெறித்தல் = முற்றுதல், சிந்தல், துள்ளுதல், பிளத்தல், குலைதல் தெறுக்கால் = தேள்