பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புளிந்தன்

300

புறம்



புளிந்தன்
= வேடன், சண்டாளன்
புளிமிதவை = புளிங்கூழ்
புளியோதனம் = புளிஞ்சோறு
புளியோரை = புளியிட்டுத் தாளித்த சாதம்
புளினம் = பறவைக்கூட்டம், மணற்குன்று
புள் = பறவை, வண்டு, வளையல், அவிட்ட நாள், நிமித்தம், கைவளை
புள்ளம் = அரிவாள், வாள்
புள்ளி = இலக்கப்புள்ளி, ஒற்றெழுத்து, இமயமலை, பல்லி, நண்டு, பொறி, மதிப்பு, ஆய்த எழுத்து
புள்ளிமலை = இமயமலை
புள்ளிருக்குவேளூர் = வைத்தீசுவரன் கோயில்
புள்ளுவம் = வஞ்சகம், பறவை ஒசை
புள்ளுவர் = வஞ்சகர், கீழ்மக்கள், வேடர்
புள்ளோச்சல் = பறவை துரத்தல்
புள்ளோப்பல் = பட்சி காத்தல்
புறகு = புறம்பானவன்
புறக்கணித்தல் = அசட்டை செய்தல்
புறக்கரணம் = வெளியுறுப்பு
புறக்கிடுதல் = புறங்காட்டல்
புறக்கு = வெளிப்புறம்
புறக்கொடை = பிரிந்தநிலை, புறமுதுகிடுகை
புறக்கை = புறங்கை, வெளிப்புறம்
புறங்கடை = வெளிவாயில்
புறங்காடு = சுடுகாடு, இடுகாடு
புறங்காட்டல் = தோற்றோடுதல்
புறங்காணுதல் = தோற்றோடச் செய்தல்
புறங்காத்தல் = காப்பாற்றல்
புறங்கூறல் = தூற்றல்
புறணி = குறிஞ்சி நிலம், முல்லை நிலம், தோல், புறங்கூறல், புறம், மரப் பட்டை
புறத்தவன் = ஐயனார்
புறத்திணை = அரசர் போர் ஒழுக்கம்
புறநகர் = நகர்ப்புறம்
புறநீர்மை = வெளிக்குணம்
புறந்தருதல் = போற்றுதல்
புறப்பற்று = எனதென்னும் பற்று, கர்வம்
புறப்பொருள் = அறம்பொருள் வீடு, படைத்திறம்
புறம் = இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி, பின்புறம், முதுகு, வீரம்