பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறம்பணை

301

புன்கூர்தல்



புறம்பணை
= குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம்
புறம்பு = தனிமை, புறம், வெளியிடம், முதுகு
புறவணி = முல்லை நிலம்
புறவம் = காடு, முல்லை நிலம், சீர்காழி
புறவிதழ் = புல்லிதழ்
புறவு = புறா, காடு
புறவுரை = பாயிரம்
புறநடை = புறனாக எடுத்துச் சொல்வது, விதியில் அடங்காதது
புற்கம் = குறைவு, புன்மை, மாயம், புல்லறிவு
புற்கலம் = உடல், உயிரற்றது
புற்கலன் = உயிர்
புற்கு = கபில நிறம்
புற்கெனல் = புகர் நிறக்குறிப்பு
புற்கை = சோறு, கஞ்சி, கூழ்
புற்பதி = பனை
புற்புதம் = நீர்க்குமிழி
புனகம் = உணவு
புனம் = கொல்லை, அலங்காரம்
புனருத்தி = கூறியது கூறல்
புனர்விவாகம் = இரண்டாவது மணம்
புனலி = ஒருவகை மல்லிகை
புனவர் = குறிஞ்சில மக்கள்
புனனாடன் = சோழன்
புனனாடு = காவேரிநாடு, சோணாடு
புனிதம் = சுத்தம்
புனிதன் = இந்திரன்
புனிறு = ஈன்றணிமை
புனிற்று = இளங்கன்றையுடைய பசு
புனை = அழகு, சிலை, பொலிவு, விளங்கு
புனைகுழல் = பெண், அலங்கரிக்கப்பட்ட கூந்தல், சதியோசனை, சூது
புனைதல் = கற்பித்தல், அணிதல், அலங்கரித்தல், செய்தல், கட்டுதல், சிறப்பித்தல்`
புனைந்துரை = பாயிரம்
புனையல் = மாலை
புனையிறும்பு = செய்காடு
புனைவிலி = உவமானப் பொருள்
புனைவுளி = உவமேயப் பொருள்
புனைவர் = கம்மாளர்
புன்கண் = தரித்திரம், துன்பம், இழிவு, அச்சம்
புன்கம் = சோறு
புன்கூர்தல் = வருந்துதல்