பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொறிதல்

311

போகம்


பொறிதல் = தீச்சுடர், விளங்குதல், சிதறுதல், சறுக்குதல், கலைதல்
பொறித்தல் = எழுதுதல், பதித்தல், அடையாளமாக வைத்தல், அழுந்துதல்
பொறிமுதல் = உயிர்
பொறியிலார் = கீழ்மக்கள்
பொறிவாயில் = புலன்
பொறுத்தல் = தாங்குதல், மன்னித்தல், தரித்தல், உத்தரவாதம் ஆதல்
பொறுப்பு = பாரம், பொறுமை
பொறை = பாரம், பூமி, மலை, பொறுமை, வலிமை, துறுகல், கல், சுமை
பொறையன் = சேரன்
பொறையாளன் = தருமன்
பொறையுயிர்த்தல் = மகப்பெறுதல்
பொற்கிழி = பொன் முடிப்பு
பொற்கொல்லர் = தட்டார்
பொற்சுண்ணம் = மணப்பொட்டி, அலங்காரத்தூள்
பொற்படி = பொன்னுலகம்
பொற்பு = அழகு, பொலிவு, அணி
பொற்புதிர் = பசலை
பொற்பூண் = பொன் நகை
பொற்றை = மலை, சிறுமலை
பொன் = அழகு, இரும்பு, செல்வம், இலக்குமி, ஆபரண மங்கிலியம், சூரியன், குரு, பொலிவு, பசலை
பொன்கண்ணன் = இரண்யாக்கன்
பொன்மலை = மேருமலை
பொன்றல் = அழிதல், இறத்தல், குன்றல்
பொன்னகர் = தேவர் உலகம்
பொன்னவன் = குரு, வியாழன்
பொன்றுதல் = அழிதல், இறத்தல்
பொன்னரிமாலை = கழுத்து மாலை
பொன்னி = காவேரி
பொன்னேர் = முதல் ஏர் உழுதல்

போ




போகக்கலப்பை = போக நுகர்ச்சிப்பொருள்
போகடுதல் = போகவிடுதல், கழித்தல்
போககுஞ்சம் = பந்தயம்
போகபூமி = பலனை யனுபவிக்கும் பதவி, விளைநிலம்
போகம் = அனுபவம், செல்வம், பாம்பின்படம், சுகம், விளைவு, உணவு, சரீரம்