பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போழம்

313

பெளவம்


வார்ப்புரு:rh


போழம் = மாறுபாட்டுச் சொல் போழ் = பிளவு, வார், துண்டம், தகடு, பனங்குருத்து போழ்தல் = ஊடுருவுதல், பிளத்தல், அழித்தல் போழ்முகம் = பன்றி போறல் = போலுதல் போற்றலர் = பகைவர் போற்றார் = பகைவர் போற்றி = துதி, பாட்டன், வணக்கம், காத்தருள்க, போற்றப்படுவது, புகழ்மொழி போற்றுதல் = காத்தல், துதித்தல், புகழ்தல், பேணுதல், வணங்கல், விரும்புதல், ஈட்டுதல் போனகம் = சோறு, உணவு போஷித்தல் = காப்பாற்றுதல்

பௌ

பெளடிகம் = இருக்குவேதம் பெளதிகம் = பூதசம்பந்தமுள்ளது, உலகம் பெளத்திரன் = பேரன் பெளமம் = நிலத்திற் பிறப்பது, பூமிசம்பந்தமானது பெளரவர் = குருகுல வேந்தர், பூருவமிசத்தோர் பெளருஷம் = புருஷத்தன்மை பெளலோமி = இந்திரன் மனைவி பெளவம் = கடல், பூரணை, ஆழம்