பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாட்டெறிதல்

328

மாத்திரை


மாட்டெறிதல் = ஏறிட்டுச் சொல்லுதல் மாணல் = மாட்சிமை, சிறத்தல் மாணவகன் = பிரம்மச்சாரி, மாணவன் மாணவ்வியம் = மாணவர் கூட்டம் மாணார் = பகைவர் மாணி = குள்ளன், பிரமசாரி மாணுதல் = சிறத்தல், மிகுதல் மாண் = மாட்சிமை, மடங்கு மாண்டார் = இறந்தோர், சிறந்தோர் மாண்பு = அழகு, பெருமை மாதங்கம் = யானை, இளமை மாதங்கர் = சண்டாளர் மாதங்கி = பார்வதி, காளி, துர்க்கை மாதரி = காளி மாதர் = அழகு, ஆசை, பெண்கள், காதல் மாதலி = இந்திரன் சாரதி மாதவம் = கள், வசந்தகாலம் மாதவன் = மன்மதன், திருமால், முனிவன் மாதவி = பனவெல்லம், சுபத்திரை, மாதவி, குருக்கத்திக் கொடி மாதவி கொழுநன் = அருச்சுனன், கோவலன் மாதானுபங்கி = திருவள்ளுவர் மாதி = மாமரம், கிரகச்சுற்று மாதிகம் = குதிரை போகும் வழி மாதிமை = தகுதி, காதல் மாதிரம் = மலை, ஆகாயம், மாதா, திக்கு, மண்டிலம், யானை மாது = பெண், காதல், அழகு, பெருமை மாதூகம் = வீடு தோறும் சென்று பிச்சை யெடுத்தல் மாதுமை = பெண்டன்மை மாதுரியம் = இனிமை, அறிவு மாதுலன் = மாமனார், தாய்மாமன் மாதுலை = மாமி, மாதுலன், மனைவி மாதோயம் = கடல் மாத்தகை = பெருந்தகை மாத்தான் = பெரியோன் மாத்தியானிகம் = மத்தியான வந்தனம் மாத்திரை = அளவு, அற்பம், பருவம், குளிகை, தனிமை