பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆதன்

31

ஆத்திரேயன்


ஆதன் = அருகன், அறிவற்றவன், உயிர், குரு, குருடன்
ஆதாரம் = இடம், பற்றுக்கோடு, அடி, ஈடு, உடல், நிலை, பிரமாணம், மழை
ஆதானி = மனக்கலக்கம், பெருமை பாராட்டல், பேரொலி
ஆதி = சிவன், விஷ்ணு, தொடக்கம், பிரதானம், முதல், மன வருத்தம், சூரியன், முற்காலம், காரணம், பழைமை, கடவுள், தாளவகை, குதிரை ஒட்டததுள் ஒன்று
ஆதிகவி = வால்மிகி முனிவர்
ஆதிக்கம் = மேன்மை, உரிமை, முதன்மை
ஆதிதைவிகம் = தெய்வத்தால் வரும் துன்பம்
ஆதித்தன் = சூரியன், வானோன்
ஆதித்தியம் = உபசரணை
ஆதித்தியர் = தேவர்
ஆதிநாதன் = சிவன்
ஆதிநூல் = வேதம்
ஆதிபகவன் = சிவன், கடவுள்
ஆதிபத்தியம் = அதிகாரம், சுதந்திரம், தத்துவம், தலைமை, மகத்துவம்
ஆதிபன் = அரசன், தலைவன்
ஆதிபெளதிகம் = உடம்பு வழியேவரும் துன்பம்
ஆதிமூலம் = கடவுள், விஷ்ணு
ஆதிரம் = நெய்
ஆதீண்டுகுற்றி = பசு தினைவு போக உராய்தற்கு வைக்கப்பட்ட கம்பம்
ஆதீனம் = ஆஸ்தி, ஆளுகை, சுதந்திரம், உரிமை, சைவ மடம்
ஆதுரம் = ஆசை, பரபரப்பு
ஆகுலன் = நோயாளி, தரித்திரன், யாசகன்
ஆத்தம் = இஷ்டம்
ஆத்தல் = கட்டுதல், அழைத்தல்
ஆத்தன் = நண்பன், சிவன், தக்கவன், நம்பப்படுபவன், அருகன், கடவுள்
ஆத்தானம் = கொலு, தரும சபை, நீதித்தலம், கோபுரவாசல், அரசசபை, பெருமன்றம்
ஆத்திகம் = கடவுள் உண்டு என்ற கொள்கை
ஆத்தியான்மிகம் = உடம்போடு கூடிய உயிர்வழியாக வரும் துன்பம்
ஆத்திரேயன் = சந்திரன்