பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேதி

346

மேற்றிசைப்பாலன்


மேதி = எருமை, நெற்களம்

மேதினி = பூமி மேதை = கள், பேரறிவு,கொழுப்பு மேதை = அறிஞன், அறிவு, பேரறிவு, நரம்பு, நிணம், புதன் மேதையர் = அறிஞர் மேத்தியம் = சுத்தம், சுருங்காலி மேந்தலை = கப்பலின் காற்றெதிர்ப்பக்கம், மேன்மை மேயம் = அளக்கப்படுவது, அறிவது மேய்மணி = நாகரத்தினம் மேரு = ஆசனபீடம், பொன்மலை, செபமாலையின் நாயகமணி மேருவில்லி = சிவன் மேரை = எல்லை, மரியாதை மேலகம் = மோட்சம், மேல்வீடு மேலனம் = கலப்பு மேலாழியார் = வித்தியாதர அரசர் மேலீடு = மேலேயிடுதல், குதிரைச் சேணம் மேலை= முன்பு, வருங்காலம் மேலோர் = அறிஞர், வானோர் மேல் = ஆகாயம், மேலிடம், இடம், இனி, மேற்கு, தலைமை, மேன்மை மேல்வரிச்சட்டம் = முன்மாதிரி மேல்காற்று = கோடைக்காற்று மேவலர் = பகைவர், விரும்புதலையுடையவர் மேவல் = ஆசை, கலக்கை, சேர்தல், நிரவுதல் மேவுதல் = அடைதல், ஓதுதல், விரும்புதல், அமர்தல், பொருந்துதல் மேழகம் = கவசம், ஆடு, செம்மறிக்கடா மேழி = கலப்பையின் மேற்கைப்பிடி, விவசாயம், கலப்பை மேழிப்படையோன் = பலதேவன் மேழியர் = பூவைசியர், வேளாளர் மேளனம் = கூட்டம், கலப்பு மேளித்தல் = கூட்டுதல் மேற்கட்டி = மேல் விதானம் மேற்கோள் = போர்வை, முன்னோர் வழக்கு, சனி, மேன்மை, உதாரணம் மேற்செலவு = படைஎழுச்சி மேற்படல் = அதிகப்படல், வெல்லுதல், மேன்மைப்படல் மேற்றிசைப்பாலன் = வருணன்