பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வட்டித்தல்

359

வதி


வட்டித்தல் = ஆணையிடல், எழுதுதல், தாளம்போடல், புடைத்தல், சுழற்றுதல், வளைத்தல்
வட்டில் = கிண்ணம், அம்புக்கூடு
வட்டினி = பந்தயப்பொருள்
வட்டு = சூது, திரட்சி, சூதாடு கருவி, எஃகுருண்டை, ஒரு வகைச்செடி, சிறு ஆடை
வட்டுடை = அரைக்கவசம், வீரருடை, சீலை
வட்டுவம் = வெற்றிலைப்பை, மருந்துப்பை
வட்டை = வழி
வணர் = வளைவு
வணர்தல் = வளைதல், மயிர் குழன்றிருத்தல்
வணிசம் = எருது
வண்களமர் = வேளாளர்
வண்கை = கொடை, கொடுக்கும் கை
வண்மை = வழங்குகை
வண்டயம் = கழல், வீரத்தண்டை
வண்டர் = கடிகைமாக்கள், மங்கல பாடகர், நாழிகை அறிவிப்பவர்
வண்டல் = மகளிர் விளையாட்டு, சேறு, நதிக்கரை, நீரடிமண், சந்தனக் குழம்பு, விளையாட்டு
வண்டனார் = முனிவர்
வண்டன் = குள்ளன், திண்ணியன், தீயோன்
வண்டானம் = நாரை
வண்டி = வயிறு, வண்டி
வண்டில் = வண்டி
வண்டு = வளையல், அம்பு, சங்கு, நூல், குற்றம், பூசநாள், தேன்வண்டு
வண்ணகம் = அலங்கரிப்பு
வண்ணமகள் = அழகு செய்பவள்
வண்ணம் = அழகு, சந்தம், துதி, வகை, செயல், பூசுதல், நிறம், இசைப்பாட்டு, வடிவு, விதம், ஒப்பனை, குணம்
வண்ணித்தல் = விரித்தல், புகழ்தல்
வண்மை = அழகு, ஈகை, உண்மை, வலிமை, செல்வம், வளப்பம், பேரிகை
வதம் = விரதம், வதைதல், கொலை
வதரம் = இலந்தை
வதரி = பருத்தி, இலந்தை
வதறுதல் = திட்டுதல்
வதனம் = முகம், சொல்லல்
வதி = வழி, சேறு, தங்கும் இடம்