பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லேறு

365

வழுதலை


  
வல்லேறு = இடி
வல்லை = விரைவு, பெருங்காடு, வன்மை
வல்விலங்கு = யானை
வழகு = மென்மை
வழக்கழிவு = நியாய விரோதம்
வழக்கு = செய்கை, ஈகை, இயங்குதல், நீதி, வழக்கம் ஒழுக்கம், நெறி
வழக்காட்டு = ஊடல்
வழக்காறு = உலகில் வழங்கி வரும் வழி
வழங்கல் = அசைத்தல், செலுத்தல், செல்லல், மழை பெய்தல், நடத்தல், சொல்லல், கூத்தாடல், கொடுத்தல், நடைபெறுதல், ஈதல், உலாவல்
வழங்காத்தேர் = பேய்த்தேர்
வழலை = கோழை, பாம்பு, புண்வடி நீர்
வழாஅல் = தவறுதல், வழுக்கை
வழா அநிலை = வழுவாது இருப்பது
வழாறு = நிறை நீர்
வழி = இடம், ஒழுக்கம், பழமை, முறை, பின், சந்ததி, பின்பு, மகன், முறை, கிளை, ஏவல், மரபு, நெறி, சுற்றம், உபாயம்
வழிக்கொள்ளுதல் = பயணப்படுதல்
வழிச்செலவு = பயணம்
வழித்தொண்டு = தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும் தொண்டு, பரம்பரை அடிமை
வழித்தோன்றல் = மகன்
வழிநாள் = பின்வரு நாள்
வழிநூல் = முதல் நூல் வழியே விகற்பித்துக் கூறப்படும் நூல்
வழிபடல் = வணங்கல்
வழிப்படுதல் = நேர்ப்படுதல்
வழிப்புரை = வழியில் தங்கும் இடம்
வழிமுறை = தலைமுறை, கிராமம், சந்ததி
வழிமொழிதல் = முன் ஒருவர் கூறியதைப் பின் ஒருவர் ஆமோதித்தல், அனுமதித்தல், வழிபாடு கூறுதல்
வழியுரைப்போர் = தூதர்
வழியெஞ்சுதல் = வமிசமற்றுப் போதல்
வழு = கேடு, குற்றம், பழிப்புரை
வழுக்கல் = மறத்தல், அடித்தல், இழுக்கல்
வழுக்கு = நிணம், தவறு, கொழுப்பு, மறதி
வழுதலை = கத்தரி