பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விண்டு

378

விதிர்ப்பு


  
விண்டு = காற்று, மூங்கில், மேலுலகம், மேகம், விஷ்ணு, மலை, ஆகாயம்
விண்டுராதன் = பரீட்சித்து மன்னன்
விண்ணகம் = தேவவுலகம்
விண்ணப்பம் = அறிவித்தல்
விண்ணவன் = அருகன், தேவன்
விண்ணாணம் = நாகரிகம், விஞ்ஞானம், நாணம், இடம்பம்
விண்ணுலகம் = தேவலோகம்
விண்ணேறு = இடியேறு
விண்ணோர் = தேவர்
விண்மணி = சூரியன்
விண்மீன் = நக்ஷத்திரம்
விண்முழுதானி = இந்திரன்
விதண்டம் = வீண்வாதம்
விதண்டை = தன்மதம், நிறுத்திப்பேசல்
விண்ணதிர்ப்பு = இடிஒசை
விததி = கூட்டம், வரிசை, பரப்பு
விதத்தல் = மிகுத்துக்கூறுதல், சிறப்பித்துக் கூறுதல்
விதந்து = மாங்கல்ய நூலிழந்தவள்
விதப்பு = நடுக்கம், மிகுதி, விவரம்
விதப்புக்கிலவி = மிகைமொழி
விதம் = செயல், மாதிரி, பிரகாரம்
விதரணம் = கொடை
விதரணை = சாமர்த்தியம், விவேகம், கொடை, தயாளம்
விதரம் = பிளப்பு
விதர்க்கம் = ஆராய்வு, சந்தேகம்
விதலை = பூமி, நடுக்கம்
விதவை = கூழ், பாற்சோறு, குழம்பு, கைம்பெண்
விதறு = நடுக்கம்
விதனம் = துயர்
விதாதா = அருகன், பிரமன்
விதாரணம் = பிளத்தல்
விதாரம் = பிளத்தல், யுத்தம், முள் இலவு
விதானம் = ஏற்பாடு, விதி, மேற்கட்டி, செயல்
விதி = நெறி, ஊழ், தன்மை, செய்தொழில், ஆயுள், செல்வம்,பிரமன், கிரமம், ஆகம முறை
விதியுளி = யாகம், முறை, விவாகம்
விதிர்த்தல் = அசைத்தல், நடுங்கல், சிதறுதல், சொரிதல், அஞ்சுதல்
விதிர்ப்பு = நடுக்கம்