பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேளாமை

396

வைசித்திரி


  
வேளாமை = விரும்பாமை, யாகம் செய்யாமை
வேளாளர் = ஈகையாளர், பூவைசியர்
வேளான் = குயவன்
வேளிர் = குறுநில மன்னர்
வேள் = மன்மதன், முருகன், விருப்பம், மண், திருமணம், வேளாளர் பட்டப்பெயர்
வேள்வி = யாகம், ஆராதனை, ஈகை, மகநாள், புண்ணியம், விவாகம், நோன்பு
வேள்விநாயகன் = சிவன், இந்திரன்
வேறல் = வெல்லுதல்
வேற்கோட்டம் = முருகன் கோயில்
வேற்றுப்புலம் = பகையிடம்
வேனல் = வேனில், கோபம், கானல், வெம்மை, கொதிப்பு
வேனிலான் = மன்மதன்
வேனில் = பொலிவு, கோடை, கானல், அழகு
வேனில்வேள் = மன்மதன்

வை


வை = கூர்மை, வைக்கோல்
வைடிகன் = இரத்தினங்ளைச் சுத்தி செய்பவன்
வைகல் = தங்குதல், நாள், விடியல், தங்குமிடம், தூங்கல், கழிதல், வேளை
வைகல்லியம் = குறைவு
வைகறை = விடியற்காலம்
வைகறைப்பாணி = காலை வாத்திய ஒலி
வைகாசி = ஒரு மாதம், விசாகம்
வைகாசநம் = வைஷ்ணவ ஆகமங்களில் ஒன்று
வைகார்ப்பு = இடையரறா ஆரவாரம்
வைகுண்ணியம் = குணம் இன்மை
வைகுறு = விடியற்காலம், வைகறை
வைகுதல் = தங்குதல், வற்றுதல், விடிதல், புணர்தல், கழிதல்
வைகைத்துறைவன் = பாண்டியன்
வைக்கோற்பழுதை = வைக்கோற்புரி
வைசயந்தம் = இந்திரன் மாளிகை
வைசயந்தி = திருமால் அணியும் மாலை
வைசித்திரி = புதுமை