பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊசல்

435

ஒலியலந்தாதி


  
 



ஊசல் = ஆசிரியவிருத்தத்தாலேனும் கலித்தாழிசை யாலேனும் சுற்றத்துடன் பொலிக என ஆடீர் ஊசல், ஆடாமோ ஊசல் எனப் பாடப்படுவது (உ-ம்) திருப்பொன்னூசல் (திருவாசகத்திலுள்ளது).
 
ஊரின்னிசை = பாட்டுடைத் தலைவனது ஊரைச்சார இன்னிசைவெண்பாவால் தொண்ணூறேனும், எழுபதேனும் ஐம்பதேனும் அமையப் பாடப்படுவது.
 
ஊர்நேரிசை = பாட்டுடைத் தலைவன் ஊரைச் சார்ந்து நேரிசை வெண்பாக்கள் தொண்ணூறேனும், எழுபதேனும் ஐம்பதேனும் பாடப்படுவது.

ஊர்வெண்பா = வெண்பாவால் ஊரைப் புகழ்ந்து பத்துச் செய்யுள் பாடுவது.



எண்செய்யுள் = பாட்டுடைத் தலைவனது ஊரையும் பெயரையும் பத்து முதல் ஆயிரம் அளவு பாடி முடிப்பது.

எழுகூற்றிருக்கை = ஏழறையாகக் குறுமக்கள் முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும் தன்மையில் ஒன்று முதலாக ஏழ் இறுதியாக முறையானே பாடுவது. (உ-ம்) திருஞானசம்பந்தர் பாடிய திருஎழுக்கூற்றிருக்கை.



ஐந்திணைச்செய்யுள் = புணர்தல், பிரிதல், ஊடல், இரங்கல், இருத்தல் என்னும் ஐந்து உரிப்பொருள் தோன்றக்குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், முல்லை ஆகிய ஐந்து திணைகளின் உரிப்பொருள்களைப் பொருத்திப் பாடப்படுவது.



ஒருபாவொருபஃது = அகவல் பாவாலேனும் வெண்பாவாலேனும், கட்டளைக் கலித்துறையாலேனும் தனித்தனிப் பாடல்கள் பத்து அந்தாதித் தொடை யமையப்பாடுவது. (உ-ம்) பட்டினத்தார் பாடிய ஒருபாவொருபஃது.

ஒலியலந்தாதி = வெண்பா, அகவல், கட்டளைக் கலித்துறை முறையே பத்துப்