பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தானை மாலை

439

நாற்பது


குணங்களை வகுப்பு என்னும் பாடல் அமையப் பாடப்படுவது.

தானை மாலை = ஆசிரியப்பாவால் முன்னர் செல்லும் கொடிப்படையைப் புகழ்ந்து பாடப்படுவது.

து

தும்பைமாலை = தும்பை மலரைச் சூடிப் பகைவரோடு போரிடலைக் கூறுவது

துயிலெடைநிலை = பாசறையில் எந்தவிதக்கவலையும் இன்றி உறங்கிய மன்னருக்கு நற்புகழ் உண்டாக எண்ணிய சூதர் அம்மன்னரத் தூக்கத்திலிருந்து எழுப்புவதைப் பாடுதல்.

தூ

தூது = காதல் கொண்ட தலைவனும் தலைவியும் தம் தம் காதற் குறிப்பையும் அவத்தையையும் கூறுமாறு பாணர் கிளி முதலானவர்களைத் தூதாக அனுப்புவது போல் கலி வெண்பாவால் பாடுவது (உ-ம்) கச்சி ஆநந்த ருத்ரேசர் வண்டுவிடு தூது, தமிழ்விடு தூது.

தொ

தொகைநிலைச் செய்யுள் = ஒரேவகையான பாவால் தொகுக்கப்பட்ட பாடல்களையுடையது. (உ-ம்.) கலித்தொகை.


நயனப்பத்து = கண்ணினைக் குறித்துப் பத்துப் பாடலில் பாடுவது.

நவமணிமாலை = ஒன்பது மணிகள் கோக்கப்பட்ட மாலை போல வெண்பா முதலில் அமைய, பின்னர் வேறுபட்ட பாவும், பா இனமும் ஆக ஒன்பதுசெய்யுள் அந்தாதித் தொடை பொருந்தப் பாடப்படுவது. கட்டளைக் கலித்துறையாலும் பாடப்படும்.(உ-ம்) பிட்சாடர் நவமணிமாலை.

நா

நாமமாலை = அகவலடியும் கலிப்பாவடியும், வரப்பெற்ற வஞ்சிப்பாவால், மகனைப் புகழ்ந்து பாடப்படுவது.

நாற்பது = காலத்தைப் பற்றியேனும் இடத்தைப் பற்றியேனும், பொருள் பற்றியேனும் நாற்பது வெண்பாக்களால் பாடப் படுவது, (உ-ம் ) கார்