பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகநாநூறு

449

அகப்பொருள் விளக்கம்


அகநானூறு = சங்க இலக்கிய நூல்கள் எட்டுத்தொகை நூற்களுள் இதுவும் ஒன்று. இன்பத்தைப் பற்றிக் கூறும் 100 அகவற்பாக்களையும், கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்றையும் கொண்டது. இப்பாடல்கள் ஒரு புலவரால் பாடப்பட்டவை அல்ல. 145 புலவர்களால் அவ்வப்போது பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்ட பாடல்களின் தொகுதியே இந்நூலாகும்.பெண்பாற்புலவர்கள் பாடிய பாடல்களும் இதில் உண்டு. இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் உண்டு. இதனைத் தொகுக்குமாறு வேண்டியவர் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியராவர். தொகுத்துத் தந்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மனார். இந்நூல் மூன்று பிரிவுகளையுடையது. அவை, களிற்றுயானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என்பன. செய்யுட்களில் அமைந்துள்ள நடையைக் கருதி இவ்வாறு பாகுபடுத்தினர். ஒன்று முதல் நூற்றிருபது 57 பாடல்கள் களிற்றியானை நிரையைச் சார்ந்தவை. 121 முதல் 300 பாடல்கள் மணிமிடை பவளத்தைச் சார்ந்தவை. முன்னூற்றொன்று முதல் நானூறு வரையில் உள்ளவை நித்திலக் கோவையைச் சார்ந்தவை. இவையனைத்தும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளைப் பற்றிய இன்பப் பகுதிகளை அறிவிக்கும் இன்ப நூல், கடைச்சங்க காலம்.

அகப்பொருள் விளக்கம் = நாற்கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்டது. தமிழ் மொழியில் உள்ள எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களுள் அகப்பொருள் இலக்கணங்களைப் பற்றி அறிதற்குப் பெருந்துணை செய்யவல்லது. இதன் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. இது அகத்திணை இயல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்ற ஐந்து பிரிவுடையது. 252 சூத்திரங்களைக் கொண்டது. இந்நூல் வாயிலாக ஐந்திணை