பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இப்பர்

43

இயமம்


இப்பர் = வைசியரில் ஒரு வகையினர், இடையர், வணிகர்
இமகிரணன் = சந்திரன்
இமம் = பனி, சந்தனம், குளிர்ந்த நீர், குளிர்
இமயம் = பொன்மலை, மந்திரமலை, பொன், இமாலயம்
இமயவல்லி = பார்வதி
இமயவில் = இமய மூங்கில் வில், மேருவில்
இமயவில்லி = சிவன்
இமவான் = இமயமலை, இமயமலை அரசன்
இமிர்தல் = ஒலித்தல், ஊதுதல்
இமில் = எருத்தின் திமில்
இமிழ = மிக
இமிழிசை = ஒருவகைப்பறை
இமிழ் = ஒலி, கயிறு, கட்டு
இமிழ்தல் = ஒலித்தல், தழைத்தல், கட்டுதல்
இமிழ்த்தல் = கட்டல், ஒலித்தல்
இமை = அற்பம், கண் இமை, கரடி, மயில்
இமைத்தல் = ஒளி செய்தல், சுருங்குதல்
இமைப்பிலர் = தேவர்
இமைப்பு = ஒளி, இமைப் பொழுது, விளக்கம்
இமையவர் = தேவர்
இம்பர் = இனி, இவ்வுலகு, இவ்விடம்
இம்பில் = ஒரு விளையாட்டு
இம்மி = பத்துலட்சத்து எழுபத்தையாயிரத்து இருறூற்றில் ஒருபங்கு, அணு, சிறு நிறை
இம்மை = இப்பிறப்பு, இகபோகம், இந்த உலகம்
இயக்கம் = வழி, போதல், நடமாடுதல், மலசலங்கள், குறிப்பு, வடதிசை
இயக்கராசன் = குபேரன்
இயக்கல் = தொழிற்படுத்தல், மின்னல், உழத்தல், செலுத்தல்
இயக்கன் = கந்தருவன், யட்சன்
இயக்குதல் = இயங்கச் செய்தல், ஒளிப்பித்தல், நடத்தல்
இயங்காத்திணை = இடம் விட்டுப் பெயராத சாதிப் பொருள்
இயங்குநர் = வழிப்போவார்
இயந்திரம் = தேர், மதிற்பொறி, ஆலை, சக்கரம். சூத்திரம்
இயமதூதி = பாம்பின் விஷப்பற்களில் ஒன்று
இயமம் = கொலை களவு முதலியன நீக்கிப் புலனை அடக்கி இருத்தல்