பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊசிமுறி

464

ஏலாதி


ஊசிமுறி = இடைக்காடரால் இயற்றப்பட்டது. கடைச்சங்க காலம். இந்நூல் சங்கப் புலவர்களின் சிலரின் பொருட்டு ஆத்திரங் கொண்ட இடைச்சங்கம் அழியப்பாடிய நூல் என்பது சிலர்கொள்கை.

எடுத்துயென்னும் சொல்லுக்கிட்ட வைரக்குப்பாயம் = இது ஒரு வசன நூல். சிவஞான முனிவரால் எழுதப்பட்டது. இது சிவஞான சித்தியார் சுபக்கத்தில் வரும், ‘என்னை இப்பவத்தில் சேரா வகை’, என்று தொடங்கும் செய்யுளில் உள்ள எடுத்து என்னும் சொல்லின் சிறப்பை விளக்கிக் கூறும் உரைநடை நூல். சித்தாந்தக் கருத்துக்களைக் கொண்ட கருவூலம். காலம் கி. பி. 18-ஆம் நூற்றாண்டு.

ஏகபாத நூற்றந்தாதி = இதனைப் பாடியவர் சிறந்த இலக்கண இலக்கியப் புலவர் அரசஞ் சண்முகனார் என்பவர். காலம் கி.பி. 20-ஆம் நூற்றாண்டு. நூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் அமைந்த நான்கடிகளும் ஒரே மாதிரியாக இருக்கும். அதன் பொருட்டே இது ஏகபாதம் எனப்பட்டது. மடக்கு, திரிபு அணி அமைய பாடப்பட்ட நூல்.

ஏரெழுபது = கம்பரால் பாடப்பட்டது. வேளாளர் மாண்பைக் கூறும் நூல். உழவுத் தொழிலின் சிறப்பையும் கூறுவது. காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு.

ஏலாதி = இது பதினெண் கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்று. இந்நூல் ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஆறு மருந்துச் சரக்குகளில் செய்த சூரணம் நன்மை தருதல் போல, இந்நூலும் மேற்சொன்ன மருந்து போலும் கருத்துக்களை மக்களுக்குப் புகட்டி நன்மை செய்வது என்ற காரணத்தால் ஏலாதி என்ற பெயருடன் விளங்குகிறது. இதன் ஆசிரியர் மரக்காயனார் மகனார் கணிமேதாவியார். மரக்காயனார் இவரது ஆசிரியர் எனறும் கூறுவர். 83 பாடல்களைக் கொண்டது. கடைச்சங்க காலம்.