பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தர் கலிவெண்பா

469

கபிலரகவல்



யது. பின்னால் சில பாடல்கள் எவராலோ பாடப்பட்டு இவற்றுடன் இணைக்கப்பட்டன. அவை அருணகிரியார் பாடல்கள் அல்ல என்பது அறிஞர் துணிபு. இந்நூால் நித்தம் பாராயணத்திற்குரியது. இதன் காலம் கி. பி. 15ஆம் நூற்றாண்டு. கந்தன் அனுபூதி பெறத் துணை செய்ய வல்லது.

கந்தர் கலிவெண்பா = குமரகுருபர சுவாமிகளால் பாடப்பட்டது. குமரகுருபரர் ஐந்து வயதுவரை ஊமையாக இருந்தனர். இதனைக் கண்ட பெற்றோர் திருச்செந்தூரை அடைந்து முருகனை வேண்ட முருகன் அருளால் குழந்தை பேசத் தொடங்கியது. அத்தருணம் இந்த நூலைப் பாடியருளினார் குமரகுருபரர். முருகனது பிறப்பு வளர்ப்பு பெருமை முதலியவற்றை இந்நூல் அழகு படக் கூறுகிறது. தினசரி பாராயணத்திற்குரியது. சைவ சித்தாந்தக் குறிப்புக்கள் பலவற்றைக்கொண்டது. காலம் கி. பி. 17-ஆம் நூற்றாண்டு.

கந்தர் சஷ்டி கவசம் = இது தேவராய சுவாமிகளால் பாடப்பட்டது. இதனை நித்தமும் நியமத்தோடு பாராயணம் செய்துவரின் பேய் பிசாசு அண்டா. வினைகள் தீமை செய்யா. மற்றும் எந்த விதமான இடுக்கண்களிலிருந்தும் விடுபடலாம். இதில் பல மந்திர எழுத்துக்களும் அடங்கியுள்ளன. காலம் 19-ஆம் நூற்றாண்டு.

கந்தர் நாடகம் = இராமாயணத்திற்கு ஒரு நாடகம் அமைந்தது போலவே கந்தன் வரலாற்றிற்கும் ஒரு நாடக நூலாக அமைந்தது. இது பால சுப்பிரமணிய கவி என்பரால் பாடப்பட்ட நூல். காலம் கி.பி.20-ஆம் நூற்றாண்டு.

கபிலாகவல் = இது கபிலர் என்பவரால் பாடப்பட்டது. ஆனால் இவர் சங்ககாலக் கபிலர் அல்லர் என்பது இந்நூலின் நடை கண்டு அறியலாம். இதில் வள்ளுவருடன் பிறந்தவர் யார் யார் என்ற குறிப்பை அறியலாம். இது நல்ல உபதேசமொழிகளை உலகத்தார்க்கு உணர்த்துகிறது. மக்கள் வாழ்க்கை நிலையற்றது என்று கூறி உடனே நல்லது செய்ய வேண்டும்