பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாயுமானவர் பாடல்

500

திராவிட மாபாடியம்


இந்நூலில் பல புலவர்கள் அவ்வப்போது பாடிய பாடல்கள் காணப்படும். இப்பாடல்கள் பெரும்பாலும் எளிமையுடையவையாகவும், நகைச்சுவை ததும்பக் கூடியவையாகவும் காணப்படும். இத்தொகுப்பு நூலில் பல சித்திரக் கவிகளும் பொருட்செறிவுடைய கவிகளும், நீதிகளை விளக்கும் கவிகளும் உள்ளன. இந்நூலை முற்ற ஓதி உணர்ந்தால் பல நூல்களின் பொருள்களையும், பல புலவர்களின் கவிதைச் சுவைகளையும் நன்கு உணரலாம். இந்நூலைத் தொகுத்தவர் இன்னார் என்பது அறிதற்கு இல்லை. இந்நூலுக்கு உரை உண்டு.

தா

தாயுமானவர் பாடல் = இது ஒரு சிறந்த தோத்திர நூல். வேதாந்த சித்தாந்த கருத்தும் கொண்ட நூல். இதனைப் பாடியவர் தாயுமான சுவாமிகள். இதன் காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இதற்குப் பூவை கலியாண சுந்தர முதலியார் சிறந்த பேருரை எழுதியுள்ளார்.

திணைமாலை நூற்றைம்பது = இந்நூல் சங்கம் மருவிய பதினெண் கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்று. அகப்பொருள் சம்பந்தமான நூற்றைம்பது பாடல்களைக் கொண்டது. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் ஆகிய நிலங்கள் ஒவ்வொன்றிற்கும் முப்பது முப்பது பாடல்கள் உண்டு. இதன் ஆசிரியர் தமிழ் ஆசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர் கணமேதையார் என்பவர். காலம் கடைச்சங்க காலம்.

திணைமொழி ஐம்பது = இது ஓர் அகப்பொருள் தொடர்புடைய நூல். இது சங்கம் மருவிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஐந்திணைகளாகிய குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்திற்கும் தனித்தனியே பப்பத்துப் பாடல்களைக் கொண்டது. இதனைப் பாடியவர் சாத்தந்தையார் என்பவர். காலம் கடைச்சங்க காலம்.

திராவிட மாபாடியம் = இது சிவஞான போதத்திற்கு