பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருத்தொண்டர் திரு

506

திருப்பாதிரிப்புலியூர்க்


சிவஞான முனிவர். காலம் 18-ஆம் நூற்றாண்டு.

திருத்தொண்டர் திருவந்தாதி = இது சைவ சமயத்தைச் சார்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பை அறிவிக்கும் பாடல்களைக் கொண்ட நூல். இந்நூல் பெரியபுராணம் பாடுதற்குப் பெரும் துணையாக இருந்தது. இது சைவத் திருமுறை பன்னிரண்டனுள் பதினோராவது திருமுறையில் உள்ள நூல்களுள் ஒன்றாகும். இதனைப் பாடியவர் நம்பியாண்டார் நம்பிகள். காலம் கி. பி. 11-ஆம் நூற்றாண்டு.

திருத்தொண்டர் புராண சாரம் = இது சைவ சமய நாயன்மாா்கள் அறுபத்து மூவரது வரலாற்றுக் குறிப்பைக் கொண்ட பாடல்களையுடைய நூலாகும். இது பெரியபுராணத்தையும், திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இதனைப் பாடியவர் கொற்றவங்குடி உமாபதி சிவாசாரியார் என்னும் தீட்சிதர் ஆவார். இதன் காலம் கி.பி.14ஆம் நூற்றாண்டு.

திருப்பள்ளி எழுச்சி = இதனைப் பாடியவர் தொண்டரடிப்பொடியாழ்வார். திருவரங்க நாதனைத் துயில் எழுப்பும் முறையில் அமைந்த தோத்திரநூல் இது. நாலாயிரப் பிரபந்தத்து பல பிரிவுகளுள் ஒன்று. திருவரங்கனைத் துயில் எழுப்பும் முறையில் அமைந்தது. இதன் காலம் 9ஆம் நூற்றாண்டு. மாணிக்கவாசகர் பாடியுள்ள திருப்பள்ளி எழுச்சியும் உண்டு. அது திருவாசகத்தில் அமைந்துள்ளது. திருப்பெருந்துறை சிவபெருமானைத் துயிலினின்று எழுப்பும் முறையில் அது பாடப்பட்டது.காலம் கி.பி.4 ஆம் நூற்றாண்டு. இவ்விரண்டு நூற்களிலும் இயற்கை வர்ணனை இனிது காணப்படும்.

திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் = இது தொல்காப்பிய தேவரால் பாடப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் என்பது இக்காலத்தில் திருப்பாப்புலியூர் என்று வழங்கப்படுகிறது. கி.பி.14 ஆம் நூற்றாண்டு. இது தோத்திர நூல்.