பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருப்பாவை

507

திருமந்திரம்


திருப்பாவை = ஸ்ரீ ஆண்டாள் அம்மையாரால் பாடப்பட்ட நூல். 30 பாடல்களைக் கொண்டது. பெண்கள் பாவை நோன்பை நோற்கும் முறைகள் இதில் பாடப்பட்டுள்ளன. இதனை மார்கழி மாதத்தில் பெரிதும் பாடுவர். இது இயற்கை அழகை நிரம்பக் கொண்டு இனிய பொருள் நயமுடையதாய்த் திகழும். இதன் காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு. இதற்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உரையும், இரங்கநாதாசாரியார் உரையும், பெரிய வாச்சான் பிள்ளை உரையும் உண்டு.

திருப்புகழ் = முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களின் மீது பாடப்பட்ட திருப்பாடல்களின் தொகுதியாகும். திருப்புகழைப் பயின்றால் நாக்கு பண்பட்டுச் சொற்கள் தடுமாற்றம் இன்றி வரும். திருப்புகழைப் படிப்பவர் சிந்தை வலுவாலே ஒருத்தரை மதிப்பதில்லை என்று இதன் சிறப்புக் கூறப்படுகிறது. இந்த முறையில் 16000 திருப்புகழ் பாடப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் கிடைத்தில. கிடைத்தன 1200 தாம். இந்த நூலை அழகான முறையில் அரிய குறிப்புக்களுடன் திரு. செங்கல்வராயப்பிள்ளை அவர்கள் பதிப்பித்துத் தந்துள்ளனர். இந்நூலின் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு. இந்நூல் வாயிலாக முருகப்பெருமானே திருஞான சம்பந்தராக வந்தார் என்ற குறிப்பையும் உணரலாம்.

திருப்போரூர் சந்நிதிமுறை = இது முருகப் பெருமானைப் பற்றிப் பாடப்பட்ட தோத்திர நூல். இது திருப்போரூர் முருகன் மீது பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது. நூலுள் முருகப்பெருமான் பிள்ளைத்தமிழும் அமைந்துள்ளது. அப்பிள்ளைத் தமிழ் அரிய உயர்ந்த கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. முருகப் பெருமானே திருஞான சம்பந்தராக வந்தவர் என்ற குறிப்பும் இந்நூலில் உண்டு. இதனைப் பாடியவர் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள். காலம் இ. பி. 18-ம் நூற்றாண்டு. இது தோத்திர நூல்.

திருமந்திரம் இது திருமந்திர மாலை என்றும் கூறப்படும்.