பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரிய திருமொழி

532

பெரியபுராணம்



இந்நூலுக்கு உரை உண்டு. இதனை எழுதியவர் சாமுண்டி தேவ நாயனார் என்பவர். ஒரு சிலர் மாகலூர்கிழான் எழுதினார் என்றும் கூறுவர்.

பெ

பெரிய திருமொழி = நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள ஒரு பகுதி. திருமால் மீது பாடபபட்ட தோத்திர நூல். இதனைப் பாடியவர் திருமங்கை ஆழ்வார். காலம், கி. பி. 9 ஆம் நூற்றாண்டு. இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை என்பவர் எழுதிய வியாக்கியானம் உண்டு.

பெரியபுராண சாரம் = பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு நாயன்மார்களின் மீதும் ஒவ்வொரு விருத்தமாகப் பாடப்பட்ட நூல். சில நாயன்மார்களுக்கு இரண்டு பாடல்களும் உண்டு. இதன் ஆசிரியர் கொற்றவங்குடி உமாபதி சிவசாரியர். காலம். 14 ஆம் நூற்றாண்டு.

பெரியபுராணம் = சைவத் திருமுறை பன்னிரண்டனுள், பன்னிரண்டாவதாகத் திகழ்வது. பெரியவர்களான சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல். இது ஒரு சீர்திருத்த நூல் என்பதையும், இக்காலத்துக்கு ஏற்ற நூல் என்பதையும், இது ஒரு வரலாற்று நூல் என்பதையும், சாதி, மத வேறுபாட்டைக் கடந்த நூல் எனபதையும், விதவை மணம், சமபந்தி போசனம், பிறப்பால் உயர்வு தாழ்வு கருதாத நிலைமை ஆகிய இவற்றை விளக்கும் நூல் என்பதையும் இதனைப் படிப்பவா் உணராமல் இரார். சைவசமய அடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல். இதன் ஆசிரியர் சேக்கிழார். காவியச் சுவை கனிந்து ஒழுகும் நூல். கவி நலம் கனிந்த நூல். இரண்டாம் குலோத்துங்கன் சீவக சிந்தாமணியில் ஈடு பட்டிருந்த நிலையினை யுணர்ந்த சேக்கிழார், சிவனடியார்களின் வரலாற்றைக் கூற, அவற்றைக் காவியமாகப் பாடும்படி வேண்டிக்கொண்டதன் காரணமாக வெளிவந்த நூல். காலம் கி. பி. 12-ஆம் நூற்றாண்டு. சுந்தார் பாடிய தொகை