பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மதுரைக் கலம்பகம்

535

மலைபடுகடாம்


நூற்றாண்டு. ஆங்கிலத்தில் உள்ள நாவல் போல் இது தமிழில் உள்ள நாவல்.

மதுரைக் கலம்பகம் = தென் மதுரை சொக்கலிங்கப் பெருமான் மீது பாடப்பட்ட நூல். தமிழின் மாண்பு, மதுரையின் சிறப்பு முதலியன இதில் தெரியவரும். இதனைப் பாடியவர் குமரகுருபர சுவாமிகள். காலம். கி. பி. 17 ஆம் நூற்றாண்டு.

மதுரைக்காஞ்சி = சங்கம் மருவிய பத்துப்பாட்டில் ஒரு பாட்டு. ஆசிரியப் பாவால் 782 அடிகளையுடையது. வீடு பேற்றை அடையப் பல்வேறு நிலையாமைகளைப் பெரியோர் எடுத்துக்கூறுவது காஞ்சியாதலின் இதிலும் அத்தகைய குறிப்புக்கள் காணப்படுதலின் இப்பெயர் பெற்றது. இம்முறையில் தலையாலங் காலத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியற்கு விடுபேறு நிமித்தம் பலவகை நிலையாமையைச் செறியறிவுறுத்தினார் மாங்குடி மருதனார் என்பவர். இது தமிழ் நாட்டின் சிறப்பை அறிதற்குப் பெருந்துணை செய்யவல்லது. காலம் கடைச்சங்க காலம். இதற்கு நச்சினார்க்கினியர் உரை உண்டு.

மத்தான்சாயபு பாடல் = இது ஒரு வேதாந்த கருத்துக்கள் அடங்கிய நூல். தாயுமானவர் பாடல் போக்கைத் தழுவிப் பாடப்பட்டது. அமைப்பு முறையும் அதுபோன்றே இருக்கும். இதனைப் பாடியவர் மத்தான் சாயபு. காலம் 19ஆம் நூற்றாண்டு.

மலரும் மாலையும் = தனித்தனி மலர்களும் அம்மலர்களால் ஆன மாலைகளும் எப்படி நலனுற விளங்குமோ, அதுபோலத் தனித்தனிப் பாடல்களையும் பாடல்களின் தொடர்பு பெற்ற தொடர்நிலைச் செய்யுட்களையும் கொண்டு இந்நூல் தொடுக்கப்பட்டது. இதனால்தான் இது இப்பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் தேசிக வினாயகம்பிள்ளை. காலம் 20 ஆம் நூற்றாண்டு.

மலைபடுகடாம் = சங்கம் மருவிய பத்துப்பாட்டில் ஒன்று. இது கூத்தர் ஆற்றுப்படை என்றும் கூறப்படும். 583 அடிகளைக் கொண்டது. ஆசிரி