பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மோகவதைப் பரணி

543

யாப்பெருங்கலக் காரிகை


திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், போற்றிப் பஃறெடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய பதினான்கு சாத்திரங்கள் உள்ளன. பற்பல காலத்தில் இருந்து ஆசிரியர்கள் செய்த காரணத்தால் காலம் குறிப்பிடப்படவில்லை.

மோ

மோகவதைப் பரணி = இது ஒரு வேதாந்த நூல். இதனைப் பாடியவர் தத்துவராயர். இது வேதாந்த கருத்துக்களைக் கற்பனையாக கொண்டு பாடப்பட்டது. இதில் மோகன், விவேகன் என்பானுக்கும் போர் நடப்பதாகக் கூறி, இறுதியில் விவேகன் வெற்றிகொண்டான் என்ற முறையில் முடியும் நூல். காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு.

யசோதர காவியம் = இது ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது 320 பாடல்களுடன் 5 சருக்கங்களுடன் விளங்குவது. இது வடமொழி யசோதர சரித்திரத்தை ஆதரவாகக் கொண்டு எழுதப்பட்டது. மாரித்தன் என்னும் இராச மாபுர மன்னனுக்கு உயிர்கள் பலி கொடுத்தல் தீமையாகும் என்று அறிவுறுத்த யசோதரனது பல பிறவிகளைக் கூறும் கதைகள் அடங்கிய நூல். தலைவன் யசோதரன். கதை சுவையுடையது. ஆசிரியர் அறிதற்கு இல்லை. கி.பி.11 ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றிய நூல்.

யா

யாப்பெருங்கலக் காரிகை = தமிழ்மொழியின் இலக்கணங்களுல் ஒன்றான யாப்பிலக்கணத்தைக் கட்டளைக் கலித்துறை என்னும் பாவால் கூறும் நூல். எழுதியவர் அமிர்தசாகர முனிவர். இதற்குக் குணசாகரர் என்பார் உரை எழுதியுள்ளார். காலம் 11-ஆம் நூற்றாண்டு. சுயமாகச் செய்யுளைப் பாட இந்நூற் பயிற்சி இன்றியமையாது வேண்டற்பாலது.