பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதங்கோட்டாசான்

551

அதிவீரராம பாண்டியர்


யுடன் சிற்றின்பச் சுவைகளையும் இனிதின் எடுத்துக்காட்டும் நூல். கி.பி.19-ஆம் நூற்றாண்டினர்.

அதங்கோட்டாசான் = இவர் அகத்திய மாணவர்களுள் ஒருவர். இவர் முன்தான் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. நான்கு வேதங்களை நன்கு பயின்றவர். அகத்தியர் காலத்தவர். இவை அனைத்தும் தொல்காப்பியப் பாயிரச் செய்யுளால் விளங்குகின்றன.

அதிமதுரகவி = இவர் மதுரையில் வாழ்ந்தார். திருமலை நாயக்கன் ஆத்தானப் புலவர். காளமேகப் புலவரிடம் வாதத்தில் தோற்றவர். கி.பி 16-ம் நூற்றாண்டு.

அதிராவடிகள் = இவர் பதினோராம் திருமுறையில் உள்ள மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவையின் ஆசிரியர். கி.பி.9-ஆம் நூற்றுண்டினர்.

அதிவீரராம பாண்டியர் = இவர் குலசேகர பாண்டியன் திருமகனார். இவரது தமையனார் வரதுங்க பாண்டியர். கொற்கை, தென்காசி ஆகியவற்றைத் தலைநகராகக் கொண்டு மதுரையை ஆண்டவர். இவரது ஆசிரியர்கள் சுவாமிநாத தேவர், வேம்பத்தூர் ஈசான முனிவர், சுவாமி வாசுதேவர், சிதம்பரம் அகோர சிவாசாரியார். இவருக்கு வல்லபதேவன், பிள்ளைப்பாண்டியர், குலசேகரன், குண சேகரவழுதி என்ற பெயர்ளும் உண்டு. இவர் இயற்றிய நூல்கள் நைடதம்,காசிகாண்டம், கூர்மபுராணம், லிங்க புராணம், வாயுசங்கிதை வெற்றி வேற்கை என்பன. இவரது தமையனார் வரதுங்க பாண்டியரும் பல நூல்களைச் செய்திருப்பதால் "பட்டரில் இருவர் பாண்டியில் இருவர்" என்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளது. பட்டரில் இருவர் சிவஞான முனிவரும், கச்சியப்பரும். பாண்டியில் இருவர் வரதுங்கரும், அதிவீரராமரும் : தவறுடைய பாடல்களைப் பாடிவரும் புலவர்களின் தலையில் குட்டி வந்த பாண்டியர் இவர். இவரைக் குறித்துத்தான் 'குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் ஈங்கில்லே' என்ற பாடலும் எழுவதாயிற்று.