பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பாவு முதலியார்

554

அம்பிகாபதி


கள் நில உலகில் வாழ்ந்தவர்.

அப்பாவு முதலியார் = வைணவர். இவரது ஊர் முடிச்சூர். கூரேச விஜயம், விட்டுணு தத்துவம், இராமானுச நூற்றந்தாதி உரை இவரால் இயற்றப்பட்ட நூற்கள். காலம் கி.பி.19-ஆம் நூற்றாண்டு.

அமிர்த கவிராயர் = இவர் பாண்டிய நாட்டுப் பொன்னங்கால் என்னும் ஊரினர். இராமநாதபுர தளவாய் இரகுநாத சேதுபதியால் ஆதரிக்கப்பட்டவர். கோவை நூலில் வரப் பெறும் நாணிக்கண் புதைத்தல் என்னும் ஒரு துறையினை விதமாகப் பாடிய பெரும் புலவர். அதுவே ஒரு துறைக்கோவை எனப்படும். இவரது காலம் கி.பி.17-ஆம் நூற்றாண்டு.

அமிர்தசாகரம் = வேளாளர். சமண சமயத்தினர். யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்ற இரண்டு நூற்களும் இவரால் செய்யப் பெற்றவை. கி.பி.11-ஆம் நூற்றாண்டினர்.இவர் அமுதசாகரர் என்றும் கூறப்படுவார்.

அமுதனார் = இவரைத் திருவரங்கத்து அமுதனார் என்றும் கூறுவர். இவர் திருவரங்கத்தினர். இவர் ராமானுஜ நூற்றந்தாதியின் ஆசிரியர். இது பிரபந்த காயத்திரி என்றும் கூறப்படும்.

அம்பலவாணக் கவிராயர் = திருவாடுதுறை ஆதினத்தில் 15-ஆம் பட்டத்துக் குருமகா சந்நிதானமாக விளங்கியவர். கல்விக் களஞ்சியமாக இருந்தவர். பல சித்தாந்த சாத்திரங்களை எழுதியவர். அவற்றுள் சில உபதேச வெண்பா, சித்தாந்த‌ சிகாமணி, தசகாரியம், பஞ்சாக்கர மாலை முதலியன. காலம் கி.பி.17ஆம் நூற்றாண்டு.

அம்பிகாபதி = கம்பருடைய திருமகனார். சோழ மன்னனுடைய திருமகளையே காதலித்தவர். அதன் காரணமாகக் கொலையுண்டவர். இவரது குமாரனார் தண்டி என்று கூறப்படுகின்றார். அம்பிகாபதி