பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழகிய சிற்றம்பலக் 559 அறிவுடைநம்பி




பதினேழு, உண்டு. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வாக்குண்டாம், அசதிகோவை, பந்தனந்தாதி, ஞானக்குறள், வினாயகர் அகவல் முதலிய தனி நூற்களும், இவைகளே அன்றி மற்றும் பல நூல்களும் இவர் பெயரால் வழங்கப்படுகின்றன. இவர் பல தனித்தனிப் பாடல்களையும் பாடியுள்ளார். அவற்றைத் தனிப்பாடல் திரட்டில் காணலாம்.

அழகிய சிற்றம்பலக் கவிராயர் = சிவகங்கையைச் சார்ந்த மிதிலைப்பட்டி என்னும் ஊரில் திகழ்ந்தவர். இரகுநாத சேதுபதியின் சிறப்பாகத் தளசிங்க மாலை என்னும் நூலைப் பாடியவர். 17-ஆம் கி.பி. நூற்றாண்டினர்.

அழகிய சொக்கநாதப் பிள்ளை = திருநெல்வேலி காந்திமதி அம்மையார் மீது பிள்ளைத்தழிழ் பாடியவர். பல தனிப் பாடல்களையும் பாடியுள்ளார். அவை பெரிதும் முத்துச்சாமி வள்ளல் மீது பாடப்பட்டவை. சிலேடைப் பொருள் அமைந்தன. அவற்றுள் செருப்புக்கும் திருடனுக்கும் சிலேடையாக அமைந்த கவி சுவை தரும். கி. பி. 10-ஆம் நூற்றாண்டு.

அழகிய நம்பி = வைணவர். இவரே குரு பரம்பரை வரலாற்றை எழுதியவர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு.

அழகிய கண்ணன் ஜீயர் = திருவிருத்தம், திருவாய்மொழிகட்கு வியாக்கியானமும், பன்னீராயிரப்படி என்னும் உரையும், பகவத்கீதை வெண்பாவும் பாடிய புலவர். வீர வைஷ்ணவர். காலம் அறிதற்கு இல்லை.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் = திருப்பாவைக்கு உரை, ஆறாயிரப்படி உரை, ஆசாரிய இருதயம் முதலியன இவரால் இயற்றப்பட்டவை. பிள்ளை உலோகாசாரியரின் இளவலாவார். காலம். கி. பி. 15-ஆம் நூற்றாண்டு.

அறிவுடைநம்பி = சங்க காலத்தவர். பாண்டிய மன்னர் மரபினர். இவர் மன்னராயினும், பாடல்