பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கமலை ஞானப்பிரகாசர்

573

கருணைப்பிரகாசர்


பெற்றவர். பாரி வள்ளலின் நண்பர். குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறுநூற்றில் குறிஞ்சிப் பாடல்கள், கலித்தொகையில் குறிஞ்சிக் கலிகள், இன்னா நாற்பது, நற்றிணையில் இருபது, குறுந்தொகையில் இருபத்தொன்பது, அகத்தில் பத்து, புறத்தில் முப்பது, திருவள்ளுவ மாலையில் ஒன்று ஆகிய இவைகள் இவர் பாடிய பாக்களும் நூற்களும் ஆகும். இவரது பாடல்களாகப் பதினோராம் திருமுறையிலும் சில உள. அவை மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி முதலியன. இவை இவரால் பாடப்பட்டவை அல்ல என்பது சிலரது கருத்து. பாட்டியல் ஒன்றும் இவரால் பாடப்பட்டுள்ளது.

கமலை ஞானப்பிரகாசர் = இவர் திருவாரூரில் பிறந்தவர். திருத்தருமை ஆதினத்தைச் சார்ந்தவர். பழுதை கட்டிய ஞானப்பிரகாசர் மாணவர். இவர் புட்ப விதி, அனுட்டான அகவல், திருவாரூர் பள்ளு, சிவபூசை அகவல், சிவானந்த போதம், திருமழுவாடிப் புராணம், திருவானைக்கா புராணம் முதலான நூற்களைப் பாடியவர். காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.

கம்பர் = இவர் உவச்சர் குலத்தினர். திருவழுந்தூரில் பிறந்தவர். வெண்ணெய் சடையப்பவள்ளலால் ஆதரிக்கப்பட்டவர். மூன்றாம் குலோத்துங்கன் அவைப்புலவராக இருந்தவர். இவர் ராமாயணம், ஏர் எழுபது, சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி முதலிய நூற்களைப் பாடியவர். கல்வியில் பெரியர் கம்பர் என்ற சிறப்புடையவர். இவரது திருமகனார் அம்பிகாபதி. காலம்.கி.பி.12 ஆம் நூற்றாண்டு.

கருணைப்பிரகாசர் = இவர் காஞ்சிபுரத்தினர். துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் சகோதரர். வெள்ளியம்பலவாணர் இவரது ஆசிரியர். இவர் இட்டலிகை அகவலையும், காளத்திப் புராணத்தில் ஒரு பகுதியும் எழுதியவர். காலம். கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.