பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காவிரிப்பூம்பட்டினத்

577

குணசாகரர்


பயின்றவர். அப்பயிற்சியின் காரணமாக மொழி நூல் என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதி அதனுள் திராவிடமொழிகள் ஒவ்வொன்றையும் ஆய்ந்து ஒன்றற் கொன்றிற்குள்ள ஒற்றுமைகளை எடுத்துக் காட்டித் தமிழ்மொழியின் தனிச்சிறப்பை விளக்கியவர். இவர் தெற்றத் தெளிய வடமொழிச் சார்பின்றித் தமிழ்மொழி இயங்க வல்லது என்றும் எவரும் அறிய எழுதியவர். கி.பி. 19 ஆம் நூற்றாண்டினர்.

காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் = கடைச்சங்க காலத்தவர். முல்லைப் பாட்டு ஆசிரியர்.

காளமேகப் புலவர் = ஆசுகவி பாடுவதில் மிக வல்லவர். ஸ்ரீரங்கம் கோயிலில் பரிச்சாரகராக இருந்தவர். அது போது வரதர் என்பது பெயர். திருவானைக்கா சிவன் கோயில் தாசி மோகனாங்கி காரணமாகச் சைவரானவர். அகிலாண்ட நாயகியின் அருளால் கவிபாடும் திறன் பெற்றவர். திருவானைக்கா உலா, பரப்பிரம்ம விளக்கம், சரஸ்வதி மாலை இவர் பாடிய நூல்கள். பலப்பல தனிப்பாடல்களைப் பாடியவர். அவை பெரும்பாலும் நகைச்சுவை ததும்பி இருக்கும். கி. பி. 14 ஆம் நூற்றாண்டினர்.

கி

கிருட்டிணப்பிள்ளை = பாளையங்கோட்டையினர். வைதீக சமயத்தில் இருந்து பின்னர்க் கிறிஸ்தவச் சமயத்தைச் சார்ந்தவர். இவர் இரட்சண்ய யாத்திரிகம், இரட்சண்ய மனோகரம், இரட்சண்ய குறள் முதலான நூற்களை இயற்றிவர். காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.

கு

குகை நமச்சிவாயர் = திருவண்ணாமலையில் குகையில் தவம் கிடந்த யோகியார். இவர் அருணகிரி அந்தாதி, சோணகிரி மாலை இவற்றைப் பாடியுள்ளார். கி.பி. 16 ஆம் நூற்றாண்டினர்.

குணசாகரர் = இவர் சைனர். யாப்பருங்கலக் காரிகைக்கு உரை எழுதியவர். கி.பி. 12 ஆம்நூற்றாண்டு.

73