பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குணவீர பண்டிதர்

578

குமாரசுவாமிப் புலவர்


குணவீர பண்டிதர் = தொண்டை நாட்டைச் சார்ந்த களந்தை என்னும் ஊரினர். நேமிநாதம் என்னும் இலக்கண நூலைச் செய்தவர். வச்சணந்தி மாலை என்னும் நூலும் இவரால் இயற்றப்பட்டது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டினர்,

குமட்டூர்க்கண்ணனார் = கடைச்சங்க காலத்தவர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடி இம்பற் காட்டில் உள்ள 500 ஊர்களைப் பிரம்மதாயமாகவும், 38 ஆண்டுகள் தென்னாட்டுள் வரும் வருவாயில் ஒரு பாகமும் பரிசிலாகப் பெற்று மகிழ்ந்தவர். அந்தணர் குலத்தினர்.

குமரகுருபரர் = இவர் பாண்டிய நாட்டு ஸ்ரீவைகுந்தம் என்னும் இடத்தில் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மைக்கும் பிறந்த சைவ வேளாள மரபினர். ஐந்து வயது வரை ஊமையாக இருந்தவர். பின்னர்த் திருச்செந்தூர் முருகப்பெருமான் திருவருளால் அது நீங்கப் பெற்றவர். இவரே திருப்பனந்தாளில் ஒரு மடத்தை ஸ்தாபித்தவர். தமது சிறப்பையும், சைவ சமய ஏற்றத்தையும் உயிருள்ள சிங்கத்தின் மீது அர்ந்து முஸ்லீம் மன்னருக்குக் காட்டியவர். இவர் எழுதிய நூற்கள் கந்தர்கலி வெண்பா, மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம்,கைலைக் கலம்பகம், மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டைமணி மாலை, திருவாரூர் நான்மணி மாலை, பண்டார மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, நீதி நெறி விளக்கம், சிதம்பர மும்மணிக் கோவை, சிவகாமியம்மை இரட்டைமணி மாலை, காசிக் கலம்பகம். இந்துஸ்தான் மொழியை உணரச் சகலகலாவல்லி மாலை முதலியவற்றைப் பாடியவர். இவரது ஞானாசிரியர் தருமை ஆதின மாசிலாமணி தேசிகர் ஆவார். இவர் திருமலை நாயக்கன் காலத்தவர். இவர் காலத்தில்தான் துளசிதாசர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் விளங்கினர். கி.பி. 17ஆம் நூற்றாண்டு.

குமாரசுவாமிப்புலவர்= இவர் சுன்னாகத்தில் வேளாளர்