பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குமாரதேவர்

579

குலசேகர ஆழ்வார்


மரபில் பிறந்தவர். இவர் சைவ மரபினர். வடமொழியிலும் வல்லவர். இப் பயிற்சியினால் மேகதூதக் காரிகை, சாணக்கிய நீதி வெண்பா என்னும் நூற்களை மொழிபெயர்த்து எழுதியுள்ளார். தமிழ்ப் புலவர் சரிதம், வினாப் பகுபத விளக்கம் முதலியனவும் இவர் செய்தவையே. காலம் 19 ஆம் நூற்றாண்டு.

குமாரதேவர் = இவர் கன்னட தேசத்து மன்னர். சாந்தலிங்க சுவாமிகளை ஞானாசிரியராகக் கொண்டவர். பின்னர் அரசு துறந்தவர். திருப் போரூர் சிதம்பர சுவாமிகள் இவர் மாணவர். இவர் அத்துவித உண்மை, மகாராஜா துறவு, ஆகமநெறி அகவல், ஞான அம்மானை, சிவதரிசன அகவல், சமரச அகவல் முதலான நூல்களைப் பாடியவர். திருவாதவூரார் புராணத்திற்கும் உரை எழுதியவர். வீர சைவர். கி.பி. 18ஆம் நூற்றாண்டு.

குருகைப் பெருமான் கவிராயர் = திருநெல்வேலியில் ஆழ்வார் திருநகரியில் வேளாள மரபில் பிறந்ததவர். மாறன் அலங்காரம் என்னும் அணி இலக்கணம், மாறன் பாப்பாவினம், மாறன் அகப்பொருள், நம்பெருமான் மும்மணிக் கோவை முதலான நூற்களை இயற்றியவர். காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.

குரு நமச்சிவாயர் = இவர் குகை நமச்சிவாயர் மாணவர். அண்ணாமலை வெண்பா, சிதம்பர வெண்பா, பரம ரகசிய மாலை என்னும் நூல்களைப் பாடியவர். கி,பி. 16ஆம் நூற்றாண்டினர்.

குருபாததாசர்--இவர் குமரேச சதகம் பாடியவர். கி.பி. 18 ஆம் நூற்றாண்டினர்.

குலசேகர ஆழ்வார் = இவர் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர். சேர மன்னர் மரபினர். திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர். திருமாலிடத்தும் ராம பிரானிடத்தும் பேரன்புடையவர். மன்னார்குடியில் பரமபதம் அடைந்தவர். இவரது திருப்பாடல்கள் பெருமாள் திருமொழி என்னுந் தலைப்பின் கீழ் நாலாயிரப் பிரபந்தத்தில் உள்ளன. இவர் முகுந்த மாலை என்னும் நூலை வடமொழியில் பாடியிருப்பதாகத் தெரிகிறது. பாகவதர் பெருமையினை உணர்த்த நன்கு காய்ச்சப்பட்ட