பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிவஞான முனிவர்

586

சிவப்பிரகாச சுவாமிகள்



செய்ததாகத் தெரிகிறது. இளம்பூரணம், திருக்குறள் மணக்குடவர் உரைகளைப் பதிப்பித்தவர். காலம் கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

சிவஞான முனிவர் = இவர் விக்ரமபுரத்துச் சைவ வேளாளர் குலத்து ஆனந்தக் கூத்தர், மயிலம்மை என்பாரின் தவப் புதல்வர். இவரது திருப்பெயர் முக்களாலிங்கர் என்பது. இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கியவர். கவிபாடும் ஆற்றலும் பெற்றனர். இவர் திருவாவடுதுறையை அடைந்து பின் வேலப்ப தேசிகரால் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்டுச் சிவஞானயோகி என்ற பெயரைப் பெற்றவர். இவர் இலக்கணம், இலக்கியம், தருக்கம் முதலியவற்றில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்கியவர். வடமொழியிலும் பேரறிவு பெற்றவர். இதன் பொருட்டே இவர் "வடநூற் கடலும் தென்நூற் கடலும் நிலை கண்டு ணர்ந்த சிவஞான முனிவர்" என்று சிறப்பிக்கப்பட்டவர். இவர் எல்லாத் துறையிலும் நூல் இயற்றியுள்ளார். இவர் மாபாஷ்யம் செய்ய வல்லவர் என் தைச் சிவஞான போதத்திற்கு விரிவுரை எழுதியதாலும், பிரபந்தங்களைப் பாட வல்லவர் என்பதை அழுதாம்பிகை பிள்ளைத் தமிழாலும், புராணம் பாட வல்லவர் என்பதைக் காஞ்சி புராணத்தாலும், கண்டன நூற்களை எழுத வல்லவர் என்பதைச் சிவ சமய வாத மறுப்பு என்ற நூலாலும், பரந்த இலக்கணப் புலமைக்குத் தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியதாலும் அறிந்து கொள்ளலாம். இவரைப் போன்று பரந்த பேரறிவு படைத்த ஒரு புலவரைக காண்டல் அரிது. இங்கு எடுத்துக் கூறப்பட்ட நூற்கள் சிலவே. மொழிபெயர்ப்பு அறிவைத் தருக்க சங்கிரகம் என்னும் நூலாலும் அறியலாம். காலம் 18 ஆம் நூற்றாண்டு.

சிவப்பிரகாச சுவாமிகள் = இவரைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்பர். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமாரசுவாமிப் பண்டாரம் என்பார் புதல்வர். வடமொழி தென்மொழி உணர்ந்த பெரும்,