பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

596


சிறந்த துறவி. சீவகசிந்தாமணி ஆசிரியர். நரிவிருத்தம் என்பதும் இவரால் பாடப்பட்டது. கி.பி.10ஆம் நூற்றாண்டு.

திருநாவுக்கரசர் = இவரே அப்பர் எனப்படுபவர். இவரைப்பற்றி அப்பர் என்ற தலைப்பின் கீழ்ப் பார்க்க.

திருப்பாணாழ்வார் = வைஷ்ணவ சமயாசிரியர் பன்னிருவர்களில் ஒருவர். பாணர் குடியினர். உறையூரில் பிறந்தவர். லோகசாரங்கர் என்பார் திருமால் கட்டளைப்படி இவரைத் தம் முதுகில் தூக்கிக்சென்று அரங்கன் முன் விட்ட காரணத்தால் முனிவாகனர் என்றும் கூறப்படுபவர். இவர் பாடியது அமலநாதிப்பிரான் என்பது. இதனை நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் காண்க. கி. பி. 9 ஆம் நூற்றாண்டு.

திருமங்கையாழ்வார் = இவர் சோழ நாட்டுத் திருவாலித் திருநகரியின் அருகுள்ள திருக்குறையலூரில் கள்ளர் மரபில் பிறந்தவர். இவரை நீலன் என்றும் கூறுவர். இவர் சோழ மன்னன் சேனாதிபதியாக இருந்து, வெற்றிகள் பலவற்றைக் காட்ட அதனால் அவன் திருமங்கை என்னும் ஊருக்கு மன்னன் ஆக்கினான். இவர் குமுதவல்லி என்பாளை மணந்து பின் பரம வைஷ்ணவ பாகவதர் ஆயினார். இவர் நாற்கவிகளும் பாடவல்லவர். இவர் பாடிய பாடல்கள் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந் தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்பன. இவற்றை நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் காணலாம். இவர் புத்தரது பொன்னுருவத்தைக் கொணர்ந்து ஸ்ரீரங்கத்தில் மூன்றாம் பிரகாரம் கட்டப் பயன்படுத்தியவர். கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.

திருமழிசையாழ்வார் = இவர் தொண்டை நாட்டில் திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர். இவரது மாணவன் கணிகண்ணன். இவர் வடமொழியிலும் வல்லவர். இவர் தம்மைச் சூத்திரர் என்று கூறிய வேதியரைக் கும்பகோணத்தில் வென்றவர். வைணவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். இவர் சொல்படி காஞ்சியில்