பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


= சிவன், சிவசக்தி, ஆச்சரியம்
உகத்தல் = விரும்புதல், மகிழ்தல், உயரப் பறத்தல், உயர்தல்
உகப்பு = உயர்ச்சி, மகிழ்ச்சி, விருப்பம்
உகமகள் = பூமிதேவி
உகமாருதம் = ஊழிக் காற்று
உகம் = பூமி, ஊழி, நுகம், இணை, பாம்பு
உகலுதல் = தாவுதல், உதறுதல்
உகல் = சிந்துதல்
உகவு = நிலை, அழிவு
உகவை = நட்பு, மகிழ்ச்சி
உகளம் = இரண்டு, இணை
உகளல் = துள்ளுதல், பாய்தல்
உகளுதல் = குதித்தல், தாவுதல், பாய்தல், கடத்தல், ஒடித்திரிதல், துள்ளுதல்
உகாந்தம் = யுகம் முடிவு
உகாமை = வெளிவிடாமை, சிதறாமை
உகிர் = நகம்
உகிர் சுற்று = நகச் சுற்று
உகுதல் = அழிதல், உதிரல், சிந்துதல், பொடியாதல், உமிழ்தல், வீழ்தல், பறத்தல், சொரிதல், நிலைகுலைதல், சாதல், வெளிப்படுதல்
உகுத்தல் = சிதறுதல், உதிர்த்தல், வெளியிடுதல், சிந்துதல், வார்த்தல், சொரிதல்
உகைதல் = எழுதல், செல்லுதல்
உகைத்தல் = எழுப்பல், செலுத்தல், பதித்தல்
உக்கம் = வீட்டுலகம், அக்கரை
உக்கல் = உளுத்தது, பக்கம்
உக்கிரம் = கடுமை, கோபம், பயங்கரம், மூர்க்கம், வேகம், தலைக்காவல்
உக்கிரன் = வீரபத்திரன்
உக்கிராணம் = களஞ்சியம், பண்டக சாலை
உக்தம் = சொல்லப்பட்டது
உக்தி = பேச்சு, பேசுத்ல்
உங்கண் = உவ்விடம்