பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உங்காரம்

59

உடலக்கண்ணன்


உங்காரம் = வண்டின் ஒலி, அதட்டுதல், முழங்குதல்
உங்கு = உவ்விடம்
உங்கை = உன் தங்கை
உசவு = கரியும் எண்ணெயும் சேர்ந்த கூட்டு
உசவுதல் = கேட்டல்
உசநன் = சுக்கிரன்
உசா = வினா, ஆராய்வு, ஆலோசனை, ஒற்றன்
உஷாகாலம் = அதிகாலை நேரம்
உஷாதேவி = சூரியன் மனைவி
உசாவல் = ஆராய்தல், கேட்டல்
உசிதம் = உத்தமம், தகுதி, மேன்மை
உசிதன் = பாண்டியன்
உசுப்புதல் = எழுப்பல், ஏவுதல்
உஷை = காலை, வாணன், மகள், சூரியன் மனைவி
உசும்புதல் = அசைதல், அதட்டுதல்
உசுவாசம் = மூச்சை உள்ளே இழுக்கை
உச்சம் = தலைக்கு நேரிடம், உயர்ந்த நிலை, உச்சந்தலை, சிறப்பு, வல்லிசை
உச்சாசநம் = கொலை
உச்சாடனம் = ஒரு கலை, ஞானம், ஏவுதல், அகற்றல், பேயோட்டல்
உச்சாரம் = மலம், உச்சரித்தல்
உச்சி = நாய், எல்லை, தலை, நடுப்பகல், வான் முகடு, முதன்மை
உச்சிட்டம் = எச்சில், சேடம்
உச்சிதம் = மேன்மை, நெருஞ்சி
உச்சியார் = தேவர்
உச்சைச்சிரவம் = இந்திபன் குதிரை
உஞற்று = முயற்சி, ஊக்கம், தப்பு, உற்சாகம்
உஞற்றுதல் = செய்தல், முயலுதல், தூண்டுதல்
உஞ்சவிருத்தி = உதிர்ந்த தானியத்தைப் பொறுக்கி உண்டு வாழ்தல்
உடக்குதல் = பிரயோகித்தல்
உடங்கு = பக்கம், ஒத்து, சேர, உடனே
உடமுள் = வேலமர முள்
உடம்பிடி = வேலாயுதம்
உடம்பு = உடம்பு, பிறப்பு, இருப்பிடம் மெய்யெழுத்து
உடம்பை = கலங்கல் நீர்
உடலக்கண்ணன் = இந்திரன்